Sunday, March 31, 2013

இரயில்வே துறையின் குறைபாடு


ரெயில் பெட்டிகளில் பராமரிப்பின்மை... 
பயணிகளுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு!

இரயில்வே துறையின் குறைபாடுகளை, நாடாளுமன்றத்தில்
மதிமுக கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி பட்டியலிட்டார்!

நாடாளுமன்றத்தில் இரயில்வே நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு 11.03.2013 அன்று நாடாளுமன்ற மதிமுக  கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:

இரயில்வே துறை அமைச்சர் பொறுப்பை ஏற்று முதன் முதலாக நிதி நிலை
அறிக்கையினை பவன்குமார் பன்சால் அவர்கள் இம்மன்றத்தில் அறிவித்து
உள்ளார். அவருடைய நிதி நிலை அறிக்கையினை நான் பாராட்டத்தான்
விரும்புகிறேன். இந்த அறிவிப்பிலே பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட
வில்லை. பாராட்ட விரும்புகிற எனக்கு அடுத்து வருகிற செய்தி பயணிகள்
கட்டணத்தை உயர்த்தவில்லை, தவிர புற வழியாக பயணிகள் முன்பதிவுக்
கட்டணம். அதேபோல அதை இரத்து செய்கிற கட்டணம், சரக்குக் கட்டணங்
களை எல்லாம் உயர்த்தி பயணி களுடைய கட்டணங்களை எல்லாம்
மறைமுகமாக உயர்த்தியிருக்கிறார்கள். ஆகவே என்னால் பாராட்ட
முடியவில்லை.



இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே வழக்கம்போல, தமிழகம் ஒட்டு
மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டு மென்றால், புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நீண்ட நாட் களுக்கு முன்பாக நெடிய கோரிக்கையாக இங்கேகூட நம்முடைய நாடாளு -மன்ற உறுப்பினர் சிவசாமி அவர்கள் பேசியபோது குறிப்பிட்டார்,

“முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் அவர்கள், சாம்ராஜ்-பழனி
புதிய இரயில் பாதைத் திட்டத்தைப் போல, சாம்ராஜ் நகர்-பழனி திட்டம்
இப்போது, ஈரோடு-பழனி திட்டம் என்று 2008-2009 ஆம் ஆண்டு அறிவிக்கப்
பட்டது. அதற்கென்று 589 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடாக அறிவித்தார்கள்.

ஆனால், இன்றைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னையிலே
நடைபெற்ற பொது மேலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்புக்
கூட்டத்திலே நான் கேள்வியாக வைத்தேன். அந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்கும்போது, இப்போது அது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று சொன்னார்கள். ஆனால், நேற்றைக்கு நமது மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் செம்மலை அவர்கள் குறிப்பிட்ட கேள்விக்கு பதில் தருகிறபோது, The Project has been forzen due to low operation of priority என்று சொன்னார்கள்.”

நான் கேட்க விரும்புவது இந்தத் திட்டத் தினை முழு ஆய்வு செய்து அதற்கான
திட்ட வரைவு மற்றும் மதிப்பீடுகளை தயார் செய்து அப்போது அது பயன்தரக்
கூடிய திட்டமாக இருக்கிறது என்றார்கள். ஆனால், இப்போது அவ்வாறு இல்லை என்று சொன்னால், அதன் பொருள் என்னவென்றே தெரியவில்லை. இது நீண்ட நெடிய காலத் திட்டம். பலஆண்டு காலமாக ஒரு கோரிக்கையாக
இருக்கிறது. சாம்ராஜ் நகரிலிருந்து பழனி வரை என்று கோரிக்கை வைத்தார் -கள். சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலம் வரையிலே காட்டுப் பாதை யில் வருகிற காரணத்தினாலே சுற்றுச்சூழல்பாதிக்கப்படும் என்று அதை இடையிலே நிறுத்தி விட்டார்கள். இப்போது பழனியிலிருந்து ஈரோடு என்பது திட்டமிட்டு அனைத்து வேலைகளும், அளவுகளும் மற்றும் சர்வே முடிந்து
விட்டது.

ஆனால், திடீரென்று அறிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால்,என்ன காரணத்திற்காக என்று புரிய வில்லை. எனவே, அமைச்சர் அவர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது அங்கே இது பெரிய கிளர்ச்சியை மக்களிடத் -திலே உருவாக்கியிருக்கிறது. உடனடியாக இந்த நிதி நிலை அறிக்கையிலே நீங்கள் பதில் தருகிற போதே, அதை அறிவிக்க வேண்டும். அதை இந்த ஆண்டு திட்டத்திலே எடுத்துக்கொள்ள வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இரயில் நிதி நிலை அறிக்கையிலே அறிவிக்கிற திட்டங்கள் பலவும் அறிவிக்கப்பட்டு கிடப்பிலே போடப் படுகிறது என்று ஒரு எண்ணம்மக்களிடத் திலே உள்ளது. நான் கடந்த மூன்று வருட நிதி நிலை அறிக்கையிலே குறிப்பிட்டு விட்டேன். ஈரோடு-கோவை இரயில் வழித்தடத்தில் ஈரோடு சாஸ்திரி நகரில் லெவல் கிராசிங் எண்-124 இது மூன்று நிதி நிலை அறிக்கை யில் மேம்பாலம் என்று அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்படாமல் அப்படியே கிடப்பிலே போடப்பட்டுள்ளது. கேட்டால், அது டெண்டர் விடப்பட்டு உள்ளது என்று சொல்லுகிறார்களே தவிர, இதுவரை எந்தப் பணிகளும் நடைபெற வில்லை.

நாமக்கல்-ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே காவேரியில் ஒரு புதிய மின்
இணைப்பு நிலையம் அமைத்து இருக்கிறார்கள். அந்த மின் இணைப்பு நிலையம் அமைப்பதனாலே போக்கு வரத்து அங்கே தொடங்கி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஈரோடு,ஈரோடு மாவட்டத்திலிருந்து திருப்பூர்,
கோவை வழியாக கொச்சி வரையிலான இணைப்புச் சாலையாக அமைப்பதற்
கான வாய்ப்பு உள்ளது. எனவே அப்பாதையில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

ஆனால், ஈரோடு-கரூர் (19கி.மீ) இரயில் பாதையில் லெவல் கிராசிங் 16 அடிக்கடி அடைக்கப்படுவதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த லெவல் கிராசிங் அமைந்துள்ள இடத்தில் ஒரு மேம்பாலம் அவசியத் தேவையாக இருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கையில் லெவல் கிராசிங் மேம்பாலமாக மாற்ற முன்னுரிமை தரப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் அவர்கள் உடனடியாக மேம்பாலம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். மூன்று மாவட்டங் களுக்கிடையிலே கொச்சி வரை தொடர்புடைய அந்த வழித்தடத்தினை எளிமையாக்கித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாலம் எண்-342 மைலேஜ் 388/200 காவேரி பாலம் இரயில்வே பாலம் அடியில்
போக்குவரத்து தடைபட்டுள்ளது. சுமார் 40 ஆண்டு காலமாக இயங்கி வந்த இந்த சாலை, காவேரி ஆற்றில் தடுப்பணை கட்டியதால் தண்ணீர் தேங்கி அந்த
தண்ணீர் சாலையில் புகுந்துள்ளதால், இது தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த
இடத்தில் முன்பு ஒரு லெவல் கிராசிங் இருந்தது. அந்த லெவல் கிராசிங் இந்த
பாலம் தரப்பட்டதால், மூடப்பட்டது.

ஆகவே, இந்த இடத்தில் தற்போது மாநில அரசாங்கம் மேம்பாலம் கட்டு வதற்காக அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆகும் செலவையும் ஒதுக்கி இருக் கிறார்கள். அந்த பாலம் வேலை முடிகிற வரையில் இந்த பழையபாலத்திலே மாநில அரசாங்கம் அங்கே இருக்கிற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டு பக்கமும் சாலை வசதி செய்வதற்கு அரசு செலவு செய்வதற்கு உரிய அனுமதி தந்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபடாமல் இருக்கும்.

சேலம்-ஈரோடு கி.மீ.386/16 காட்டூர் சிறு பாலம். இதில் இரு சக்கர வாகனங்கள்
சென்று கொண்டிருக்கிறது. அது இரண்டு பெரிய ஊராட்சி ஒன்றியங்களை
இணைக்கிற பாலம். அதிலே உள்ளாட்சி மன்றம் வாகனங்கள் செல்வதற்கு இரு பக்கமும் சாலை அமைத்திருக்கிறார்கள். சாலை வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அனுமதி இல்லாத காரணத்தினாலே ஊராட்சி ஒன்றியங்கள் அதிலே தொடர்ந்து பணி செய்திட முடியவில்லை. அரசு செலவில் பணி செய்ய அனுமதி வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டு மென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

வண்டி எண்-66602/66603 கோவைசேலம் MEMU வண்டியும், வண்டி எண்-56100 / 56101 ஈரோடு-மேட்டூர் டேம் பயணிகள் வண்டியும் ஆனங்கூர் இரயில்
நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வண்டி எண்-16344/16345 அமிர்தா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு வரை தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வண்டியை பாலக்காடு என்பதை ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி-கரூர் பயணிகள் இரயிலை ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும்.

ஈரோடு-கரூர்-திருச்சிராப்பள்ளி இரயில் வழித்தடம் மின்சார இரயில் வண்டி
இயக்கும் வகையில் மின்தடம் அமைத்திட வேண்டுகிறேன். ஈரோடுசென்
னை ஏற்காடு எக்ஸ்பிரஸ்-16609/16610 பயணிகள் நெருக்கடி இருப்பதால் மேலும் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்றினையும்
இரண்டாவது, மூன்றாவது குளிர்சாதன வகுப்பு ஒவ்வொன்றிலும் மேலும் ஒரு பெட்டியை இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பயணிகள் செல்லும் இரயில் பெட்டிகளின் பராமரிப்பு, கழிவறைகளில் தண்ணீர் இல்லாமை. கழிவறை சுத்தமின்மை, படுக்கை விரிப்பு சுத்தமின்மை
என இரயில் பெட்டிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இரயில்வே 
நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு பராமரிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். இரயிலில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் குறைந்ததாக இருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. வெளியில் அமைந்துள்ள உணவகங்களுக்கு வேட் வரி மட்டுமே உள்ளது. சர்வீஸ் டேக்ஸ் கிடையாது.

இரயில்வே உணவகங்களில் வேட் மற்றும் சர்வீஸ் டேக்ஸ் இரண்டும்
வசூலிக்கப்படுகிறது. வெளியில் இருக்கிற உணவை விட இரயில்வே தருகிற
உணவின் தரம் குறைவாக இருக்கிறது. எனவே இந்த வரி விதிப்பின் காரணமாக மேலும் தரம் குறைய வாய்ப்பிருக்கிறது. அமைச்சர் அவர்கள் வெளி உணவகங்களில் இருப்பது போல, வேட் வரியை மட்டும் பயன்படுத்தி இதர வரியினை நீக்க வேண்டும்.

பழனி-ஈரோடு திட்டம் என்பது, பொது மக்கள் பெரும்பாலோர் எதிர்பார்க்கிற
திட்டமாக, அதற்கென்று பல போராட்டங்களை எதிர் கொண்டிருக்கிற திட்டமாக இருப்பதாலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டு மென்று பழனியிலிருந்து சாம்ராஜ் நகர் வரை நடைப்பயணம் நடத்தினார்கள்.
நீண்ட நெடுங்காலமாக கிடப்பில் இருக்கிற திட்டம் இது. எனவே அமைச்சர்
அவர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக இத்திட்டத்தை இந்த நிதி
நிலை அறிவிப்பில் நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள் கிறேன்.

அ.கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரையாற்றினார்.

நன்றி :- சங்கொலி 

No comments:

Post a Comment