Sunday, March 31, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 6

2011 ஆம் ஆண்டு 

10.8.2011 உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள், ரவீந்திரன், பட்நாயக் அமர்வில், இன்று முதலாவது வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆலை நிர்வாகத்தின் வழக்கறிஞர், மாசு கட்டுப்பாட்டுக்காக தாங்கள் 500 கோடி ரூபாய் செலவழித்து இருப்பதாகச் சொன்னார்.

உடனே நீதிபதி பட்நாயக், ‘அப்படியானல், அந்த அளவுக்கு மோசமாக மாசுபடும் சூழல் இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘இவ்வளவு செலவழிக்க வேண்டும் என்றால் எவ்வளவு இலாபம் கிடைத்து இருக்கும்?’ என்றும் கேட்டார்.

இரயில்வே துறையின் குறைபாடு


ரெயில் பெட்டிகளில் பராமரிப்பின்மை... 
பயணிகளுக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு!

இரயில்வே துறையின் குறைபாடுகளை, நாடாளுமன்றத்தில்
மதிமுக கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி பட்டியலிட்டார்!

நாடாளுமன்றத்தில் இரயில்வே நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு 11.03.2013 அன்று நாடாளுமன்ற மதிமுக  கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:

இரயில்வே துறை அமைச்சர் பொறுப்பை ஏற்று முதன் முதலாக நிதி நிலை
அறிக்கையினை பவன்குமார் பன்சால் அவர்கள் இம்மன்றத்தில் அறிவித்து
உள்ளார். அவருடைய நிதி நிலை அறிக்கையினை நான் பாராட்டத்தான்
விரும்புகிறேன். இந்த அறிவிப்பிலே பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட
வில்லை. பாராட்ட விரும்புகிற எனக்கு அடுத்து வருகிற செய்தி பயணிகள்
கட்டணத்தை உயர்த்தவில்லை, தவிர புற வழியாக பயணிகள் முன்பதிவுக்
கட்டணம். அதேபோல அதை இரத்து செய்கிற கட்டணம், சரக்குக் கட்டணங்
களை எல்லாம் உயர்த்தி பயணி களுடைய கட்டணங்களை எல்லாம்
மறைமுகமாக உயர்த்தியிருக்கிறார்கள். ஆகவே என்னால் பாராட்ட
முடியவில்லை.

டெசோ நாடக கும்பலுக்கு பதிலடி


குந்தி மேய்ந்து குடல் வளர்க்கும் கூட்டம்!

கலி பூங்குன்றனுக்கு சில கேள்விகள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களையோ, அவர் இணைந்திருக்கும் டெசோவைப் பற்றியோ, அதில் இணைந்திருக்கும் மற்றவர்களைப் பற்றியோ வைகோ குறை சொல்லவில்லை. கருணாநிதி நாடகமாடுறார் என்கிறார் வைகோ.

தென்னை மரத்தில் தேள்கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் என்பதற் கொப்ப உமக்கென்னவந்தது?

ஓய்ந்த நேரத்தில் போனா உப்புப்புளி மிளகாய்க்காகு மென்றாளாம் ஒருத்தி. அதைப்போல நாம் தி.மு.கவில் இருந்தாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியை வைகோ சாடினால் இடைவெட்டுக் கூலி கிடைக்குமென்று
எழுதுகோலைத் தூக்கிவிட்டீரா?

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 5

2011 ஆம் ஆண்டு 

29.4.2011அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. நீரி நிறுவனம், ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்க வில்லை.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் வைகோ தெரிவித்ததாவது:

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 40 நாள்களுக்குப் பின்னர்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு, நீரி நிறுவனம் ஆய்வுக்கு வந்தது. முதல் சுற்று ஆய்வு, ஏப்ரல் 6, 7, 8, தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஆய்வு, ஏப்ரல் 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு இணங்க, எனக்கும் தகவல் தரப்பட்டு, நானும் ஆய்வின்போது உடன் இருந்தேன். ஆய்வு அறிக்கையை, நீரி தந்தபின், அதனுடைய பிரதிகள் எனக்கும் வழங்கப்பட வேண்டும்; அந்த அறிக்கையின் மீதான எனது கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

Saturday, March 30, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 4

2010 ஆம் ஆண்டு 

28.09.2010 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் படி தீர்ப்பு வழங்கியது.

29.09.2010 அன்று உயர் நீதிமன்ற தீர்ப்பு படி ஆலை மூட சொல்லி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Friday, March 29, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 3

1998 ஆம் ஆண்டு 

சென்னை உயர்நீதிமன்றம் ஆணையின் படி, 17.11.1998 ல் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த நீரி நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.

அறிக்கையின் சுருக்கம் 

குடிதண்ணீருக்கான தரநிர்ணயத்தின் படி 1991-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசின் அறிவிக்கையானது, எந்தவொரு நிலத்தடி நீரிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான், அதாவது 0.05 மட்டுமே ஆர்சனிக் திரவம் இருக்கலாம். இந்த அளவை விட கூடுதலாக இருந்தால் அது பயன்பாட்டுக்குரியதல்ல என்று கூறுகிறது.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மீளவிட்டான், மடத்தூர், காயலூரணி கிராமங்களில் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரிலும், கிணற்று நீரிலும் 0.98 ஆர்சனிக் இருக்கிறது. ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள கழிவுநீர் தேக்கத் தொட்டியில் அனுமதிக்கப்பட்டதைவிட 100 மடங்கு ஆர்சனிக் இருக்கிறது.

Wednesday, March 27, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 2

1996 ஆம் ஆண்டு 

1996 பிப்ரவரி 24 இல் தூத்துக்குடி வ.உ.சி. திடலில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து, மதிமுக நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பங்கேற்ப்பு , ‘ஆலையை அகற்றும்வரை போராடுவோம்’ என்று வைகோ அறிவித்தார்.

1996 மார்ச் 5 ஆம் நாள், வைகோ தலைமையில், தூத்துக்குடியில், பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. 

1996 மார்ச் 12 ஆம் நாள், தூத்துக்குடியில் கடை அடைப்பும், கருப்புக்கொடிப் போராட்டமும் நடைபெற்றபோது, மறுமலர்ச்சி தி.மு.கழகம், முக்கியப்
பங்கு ஏற்றது.

Monday, March 25, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 1


மாசுபட்ட நகரம் தூத்துக்குடி 

சுற்றுச்சூழல் சீரழிவில் 'மாசுபட்ட நகரமாக' தமிழக அளவில் தூத்துக்குடி நகரம் 4வது இடத்திலும், சென்னை மாநகரம் 18வது இடத்திலும் இருப்பதாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நடத்திய ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகரம் 4வது இடத்தில் இருப்பதற்கான காரணம் இங்கே உள்ள ஸ்டெர்லைட் தாமிரத் தொழிற்சாலையானது தூத்துக்குடியின் சுற்றுச்சூழலைச் சீரழிவில் முதலிடம் வகிக்கிறது என்றால், இத்தொழிற்சாலையின் வரவே மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கிடையில் தான் தூத்துக்குடியில் நிறுவப்பட்டது.