Sunday, February 12, 2012

முகநூல் (Face Book ) பாடம் -1

முதல் பாடம்

முதல் பாடம் முகநூல் கணக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே , பிறகு ஒவ்வொன்றாக பார்ப்போம் ,கணினி பயன்படுத்தவும் , இணையம் பயன்படுத்தவும், தெரிந்தால் பொதும் , மற்றவைகளை நாமே ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம் .

இதுதான் ஒருவரின் முகநூல் முகப்பு பக்கம் (Home Page )   



இதில் மற்ற உங்களின் நண்பர்கள் போடு செய்திகள் படங்கள் அடுத்து அடுத்து வந்து கொண்டே இருக்கும் , முதலில் கணக்கு விவரங்களை பதிவு செய்வது எப்படி என பார்ப்போம் , உங்களும் விவரங்கள் , உங்களின் கணக்கிற்கு வரும் ஆபத்துகளை தடுப்பது போன்றவற்றை பார்ப்போம் .


மேலே உள்ள படத்தில் வலது பக்கம் மேல் புற மூலையில் எண் - 1 என குறிப்பிட்டு ஒரு அம்பு குறி காட்டபட்டுள்ளதை பாருங்கள் , அந்த இடத்தில் ஒரு கீழ் நோக்கிய சிறு முக்கோண வடிவம் போன்ற பொத்தான் இருக்கிறது அல்லவா அதை அழுத்தினால் கீழே உள்ள பாடத்தில் உள்ளவாறு சில அமைப்புக்கள் தோன்றும்


                    வலது பக்க மூளையில் உள்ள அமைப்பு 

மேலே உள்ள படத்தில் தோன்றுவது போல சில வரிகள் தோன்றும் , Use Facebook as : என்ற பகுதியை பிறகு பார்ப்போம் ,

அதற்கு கீழே உள்ள Account Settings (கணக்கு அமைப்புகள் ), Privacy Settings (ரகசிய காப்பு அமைப்புகள் ) ,Log Out ( வெளியேறு ) ,Help (உதவி ) , போன்றவற்றை பார்ப்போம்

Log Out ( வெளியேறு )

இது அழுத்தினால் உங்களில் கணக்கில் இருந்து வெளியேறி விடலாம் , நீங்கள் கணினி மையங்களில் இணையதளம் பயன்படுதவராக இருந்தால் கண்டிப்பாக உங்களில் கணக்கில் இருந்து வெளியேறி விட்டுதான் வரவேண்டும்

Account Settings (கணக்கு அமைப்புகள்)

Account Settings (கணக்கு அமைப்புகள்) அழுத்தினால் இந்த மாதிரி ஒரு திரை திறக்கும் ,

Account Settings (கணக்கு அமைப்புகள்) பக்கம்   
இந்த பகுதில் மேலும் நிறைய அமைப்புகள் இருக்கிறது , வலது பக்கம் பாருங்கள், General (பொதுவானது ),Security (பாதுகாப்பு ),Notifications (தகவல் அறிவிப்புகள் ),Apps(செயலி ) , Mobile (கைபேசி ) ,Payments ( பணங்கட்டல் ), Facebook Ads (முகநூல் விளம்பரங்கள் ) என பல பகுதிகள் இருக்கும் ,

இந்த அமைப்புகளை பயன்படித்தி நமது முகநூல் கணக்கை பாதுகாப்பது , தேவையான அமைப்புகளை செய்து கொள்ளவது என பயன்படித்தி கொள்ளலாம் , அடுத்து பாடத்தில் பார்ப்போம்

                                                                                                            தொடரும்......................
பின் குறிப்பு

பாடங்கள் புரியவில்லை என்றால் பின்னூட்டத்தில் கேட்கலாம் .

6 comments: