Wednesday, February 29, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 4

மின் வெட்டுக்குக் கண்டனம்;

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றது.
உண்மையில், தமிழ்நாடு மின்சார வாரியம், பலத்த நிர்வாகச் சீர்கேட்டுக்கு உள்ளாகி இருக்கின்றது.

தமிழகத்தில் மின் பகிர்மானத்தின்போது ஏற்படுகின்ற மின் இழப்பு 18 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.மின் திருட்டு வெகுவாக நடைபெறுகிறது;
மின்வாரியத்துக்கான பொருள்களை வாங்குவதில் பெருமளவில் ஊழல் தாண்டவமாடுகிறது;

Tuesday, February 28, 2012

இனப்படுகொலைக் குற்றவாளி இலங்கை அரசை ஆதரிக்காதீர்

இனப்படுகொலைக் குற்றவாளி இலங்கை அரசை ஆதரிக்காதீர்;
கூட்டுக் குற்றவாளியாக ஆகாதீர்!


பிரதமருக்கு வைகோ கடிதம்!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, இன்று (28.2.2012) எழுதி உள்ள கடிதம்:

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம், இலங்கையின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Saturday, February 25, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 2

நதிநீர் நாட்டு உடைமை!



மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிநீரை நாட்டு உடைமை ஆக்கி, தேசிய நதிகளாக அறிவிப்பதற்கு இந்திய அரசு சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தீபகற்ப நதிகளான தென்னக நதிகளை இணைக்கின்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்தார்.

Wednesday, February 22, 2012

மூன்று தமிழர்கள் மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அந்த வழக்கை அங்கிருந்து மாற்றுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பின்னணியில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (22.2.2012) உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் சிங்வி, நீதியரசர் முகோபாத்தியாயா அமர்வில் வந்தது.

மாற்றுதல் செய்யக் கோரிய மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மூன்று பேர் மரண தண்டனை வழக்கையும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லர் வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும், இரண்டு முறை வேறு அமர்வுகளிலே இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இதே நீதிமன்றத்தில் அனுப்பப்பட்டுவிட்டது; அதனால் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.
புல்லர் வழக்கு விசாரணை நடைபெறும். அதன்பிறகு முறையாக மற்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி சிங்வி தெரிவித்தார்.

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 1

முல்லைப்பெரியாறு: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு!


தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை, 1895ம் ஆண்டு கட்டப்பட்டு, சென்னை மாகாண அரசுக்கும் திருவிதாங்கூர் கொச்சி அரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, 999 ஆண்டுகள் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி உரிமை உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது என்று பொய்யான காரணம் காட்டி, கேரள அரசு நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாகக் குறைத்துவிட்டது. இதனால் தென் மாவட்டங்களில் 2 இலட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயிரிட முடியாமல் பேரிழப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.


Tuesday, February 21, 2012

இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது!

இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்த இயக்கமாக இந்திய அரசு அறிவித்து, அதனைத் தீர்ப்பாயமும் உறுதி செய்ததை எதிர்த்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், 2010 டிசம்பர் 8-இல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில், ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த ரிட் மனு 2011 பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது, இந்த முயற்சியில் கிடைத்த முதல் வெற்றியாகும்.

மக்களிடம் செல்வோம்; உறுதியாக வெல்வோம்!

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ம.தி.மு.க. வேட்பாளர் 
டாக்டர் சதன் திருமலைக்குமார்!

மக்களிடம் செல்வோம்;

உறுதியாக வெல்வோம்!

தாயகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வைகோ!

எங்களுடைய அழைப்பின் பேரில் இங்கே வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.

Sunday, February 12, 2012

முகநூல் (Face Book ) பாடம் -1

முதல் பாடம்

முதல் பாடம் முகநூல் கணக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே , பிறகு ஒவ்வொன்றாக பார்ப்போம் ,கணினி பயன்படுத்தவும் , இணையம் பயன்படுத்தவும், தெரிந்தால் பொதும் , மற்றவைகளை நாமே ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம் .

இதுதான் ஒருவரின் முகநூல் முகப்பு பக்கம் (Home Page )