காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மன் னார்குடி ஒன்றிய #மதிமுக,திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழன் சேவை மையம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை( 26.10.13) பதிவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில்நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை எதிர்த்தும், இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது என்பதை வலியுறுத்தியும்,இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.