ராமநதி மேல்மட்ட கால்வாய் குறித்த #மதிமுக வின் கேள்விக்கு பதில் தந்த தமிழக அரசு
கீழப்பாவூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக் கையான ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறி வித்தார். பின் திட்ட மதிப்பீடு தயார் செய்து வந்த நிலையில் 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
