Showing posts with label மே தினம். Show all posts
Showing posts with label மே தினம். Show all posts

Sunday, May 19, 2013

தொழிலாளர்களுக்காக உரிமைப் போர்க்கொடியை உயர்த்திய திராவிட இயக்கம்!

நெல்லை மாநகர் மாவட்ட ம. தி.மு.க.மற்றும் மறுமலர்ச்சி தொழிலாளர் முன் னணி சார்பில், 1.5.2013 அன்று,நெல்லை - பாளையங்கோட்டையில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை யில் இருந்து....

உலகத் தொழிலாளர்களே, ஒன்று படுங்கள்;
நீங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை;
உங்களைப் பூட்டி இருக்கின்ற அடிமை விலங்குகளைத் தவிர!

Workers of the World, Unite;
You have to lose nothing but your chains

Thursday, May 2, 2013

நெல்லையில் மதிமுகவின் மே தின கூட்டம்

நேற்று மாலை 7 மணியளவில் பாளை ஜவகர் மைதானத்தில் (திருநெல்வேலி)
ம.தி.மு.க.மாநகர் மாவட்டம்  சார்பாகமே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது .

மக்கள்தலைவர் வைகோ முழங்குகினார்

அவர் மேலும் பேசியதாவது:

இன்று தமிழகத்தை நாலாபுறமும் ஆபத்து சூழந்துள்ளது. அண்டை மாநிலங் கள் மட்டுமின்றி மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிராக துரோகம் செய்து வரு கிறது. மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அந்த மசோதா வால் இந்திய ஒருமைப்பாடு பாதிக்கப்படும். மத்திய அரசின் நிலைப்பாடு இப்படியே நீடித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு நீடிக்காது. 

Tuesday, April 30, 2013

மே தின வாழ்த்து - வைகோ

வருடத்தின் 365 நாள்களில் ஒரு சில நாள்களே உலகம் முழுமையும் கொண்டாடப்படுகின்ற உன்னதமான நாள்கள் ஆகும். அத்தகைய திருநாள்தான் ‘மே’ திங்களின் தலைநாள் ஆன ஒன்றாம் தேதி ஆகும்.

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர”

என்று பிரகடனம் செய்த காரல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கல்சும் கண்ட கனவுகளை நனவாக்க, பாட்டாளித் தோழர்கள் பச்சை ரத்தம் பரிமாறி, உரிமைப் பதாகையை உயர்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் நாள்தான் மே நாள் ஆகும்.