Showing posts with label விடுதலை புலிகள். Show all posts
Showing posts with label விடுதலை புலிகள். Show all posts

Tuesday, June 4, 2013

விடுதலைப்புலிகள் மீதான தடையை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்திடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வைகோ ஆணித்தரமான வாதம்!

விடுதலைப்புலிகளைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ்
மத்திய அரசு தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து 2010 மே மாதத்தில் அறிவித்த ஆணையை உறுதி செய்வதற்கு அமைக்கப்பட்ட தீர்ப் பாயத்தின் தலைவர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள் முன்னிலையில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி விசாரணை நடந்தபோது, கழகப் பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி, தடையை
இரத்து செய்திட வேண்டுமென வாதிட்டதோடு, தன்னையும் அந்த விசாரணை யில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென மனுத் தாக்கல் செய்தார்.

நீதிபதி விக்ரம்ஜித் சென் 25.09.2010-இல் வெளியிட்ட ஆணையில், வைகோவின் கோரிக்கை மனுவை ஏற்க முடியாது என தள்ளுபடி செய்தார்.எனினும், அரசுத் தரப்புக்கு எதிரான கருத்துகளைத் தீர்ப்பாயத்தின் முன் எடுத்து வைக்க தகுதி
உடையவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மறுப்பதற்கு இல்லை என் றும் அந்த ஆணையில் குறிப்பிட்டார்.

Thursday, May 30, 2013

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக... தடைக்காக அரசாணையில் கூறப்பட்ட காரணங்கள் நொறுங்கிப் போயின!-பகுதி 2

இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத் தைத் தடை செய்திருப்பதால் மற்ற உலக நாடுகளும் தடை செய்துள்ளன. இலங்கைத் தமிழர்கள் ஆறுதலும்,உதவி யும் பெற இந்தியாவிற்கும் வர முடியாதநிலை உள்ளது.இதையும் கடந்து 
இந்தியாவிற்குள் வருகின்றவர்கள் விடு தலைப்புலிகள் என்று சொல்லி சிறை முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ள னர். தமிழர்கள் கண்ணீரில் மிதக்கிறார் கள்.

எனவே, நீதியின் கதவைத் தட்டுவதற்காக இந்தத் தீர்ப்பாயத்தின் முன்பாக உள்ளேன்.

தீர்ப்பாயம் முன்பு வைகோ வாதம் 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

மாண்புமிகு நீதிபதி அவர்களே!

திரு. பிரபாகரன் அவர்கள் உரையாற்றுகின்ற மேடையில் அமைக்கப்பட்டுள்ள வரைபடத்தை ஒருகணம் பாருங்கள். தமிழ் ஈழத்தின் எல்லைகளைக் குறிக் கின்ற இப்படத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள்தான் தமிழ் ஈழமா கக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

Wednesday, May 29, 2013

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக... தடைக்காக அரசாணையில் கூறப்பட்ட காரணங்கள் நொறுங்கிப் போயின!-பகுதி 1

தீர்ப்பாயம் முன்பு வைகோ வாதம்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப் பட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2010 நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதி களில் விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையின்போது மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இரண்டு நாள்களும் கலந்து கொண்டார். தீர்ப்பாயத்தின் எல்லா விசா ரணை நாள்களிலும் வைகோ கலந்து கொண்டு பங்கேற்றார் என்பது குறிப்பி டத் தக்கது.

Tuesday, May 28, 2013

விடுதலைப்புலிகளை இந்தியா தடை செய்ததால்தான் ஈழத் தமிழர்கள் சர்வதேச அநாதைகளாகி விட்டனர்!

தமிழகத்திலேயே ஈழத்தமிழர்கள் தஞ்சம் புக முடியவில்லை!
டெல்லி தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்

புது டெல்லியில் விடுதலைப்புலிகள் தடை மீதான தீர்ப்பாயத்தின் தலைவரா ன டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம் ஜித் சென் அவர்கள் முன்னிலையில்
02.11.2010 அன்று விசாரணை நடைபெற்றது.மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பின்வருமாறு வாதங்களை எடுத்து வைத்தார்.

தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப் புலிகள் போராடுவது தமிழ்நாட் டையும் அதில் சேர்த்துக் கொள்வதற்காகத்தான் என்றும், இதனால் இந்தியா வின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். அவர் மேலும், தமிழ் ஈழத்தை அமைப்பதன்மூலம் இந்தியாவிலுள்ள தமிழர்களையும் முஸ்லிம்களையும் அதில் சேர்த்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் கூறினார்.

Thursday, May 23, 2013

கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்!

விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணை தீர்ப்பு ஆயத்தில்,
அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை!

விடுதலைப்புலிகள் மீதான தடை விசாரணைத் தீர்ப்பு ஆயத்தின் விசாரணை 20.10.2010 புதன்கிழமை அன்று, உதகமண்டலத்தில், தமிழகம் மாளிகையில் நடைபெற்றது.தீர்ப்பு ஆயத்தின் தலைவரும், தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதி பதியுமான, மாண்புமிகு விக்ரம்ஜித் சென், விசாரணையை சரியாக 10.30 மணிக் குத் தொடங்கினார்.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, நீலகிரி மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், கழக வழக்கறிஞர்கள் சு.குருநாதன், சூரி நந்த கோபால், பிரியகுமார், ஆசைத்தம்பி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, April 10, 2013

கடைகளில் புளி என்று சொல்லக்கூட பலரும் பயந்தார்கள்

ஸ்டெர்லைட்டை மூடும்வரை போராட்டம்தொடரும்: வைகோ

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூரில் நேற்றிரவு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கபுலி பாண்டியன் ஓராண்டு நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார்.

உரையின் சுருக்கம் :-

உலக கோடீஸ்வரன் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் அனில் அகர்வால் பல தலைவர்களை அசைத்து பார்த்துவிட்டாலும், அசைக்கமுடியாத ஆள் நான் ஒருவன் தான். வைகோவிடம் நெருப்பு கூட அண்டமுடியாது. ஆலையை மூடும் வரை என் போராட்டம் தொடரும். ஆலையை மூட ஐகோர்ட தீர்ப்பு வழங்கியது, உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் ஆலை தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டாலும், மார்ச் 30ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தமிழக மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் தடையை உச்ச நீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்பதால் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந் திருக்கிறது.