திருவள்ளூர் மாவட்டக் கழகத்தின் நிதி அளிப்பு நிகழ்ச்சி 19.07.2013 அன்று
சென்னை தாயகத்திலும் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலா ளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....
தமிழகம் முழுவதும் கழகக் கண்மணிகள் நிதி திரட்டுவதற்கான பெரும் ஊக்கத் தையும்,உந்துதலையும் வழங்கியது காஞ்சி மாவட்டம்.மிகக் குறைந்த கால அவகாசமே இருந்தபோதிலும்,நீங்கள் ஜூன் மாதத்திலேயே தொடங்கி வைத் தால், அதை மற்றவர்களும் பின்பற்ற வாய்ப்பாக இருக்குமே என்று மாவட்டச் செயலாளர் ஆருயிர் இளவல் பாலவாக்கம் சோமு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். சுடர்விடும் இரு விழிகளான, எனது ஆருயிர் இளவல், கழகத்தின்
துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும், காஞ்சி மாவட்டக் கழகச் செயலாளர்,ஆருயிர் இளவல் பாலவாக்கம் சோமு அவர்களும், தலை மைக் கழகம் எண்ணுவதைச் செயல் முடித்துக் காட்டும் ஆற்றலோடு, 1 கோடி யே 5 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கி, இன்ப அதிர்ச்சியை வழங்கினார்கள். வானத்து மழைத்துளிகளுக்கு நடுவில், தாம்பரம் பொதுக்கூட்டத்தில், அமுதத்
துளிகளாக அந்தத் தொகையை வழங்கினார்கள்.