Tuesday, April 2, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 8

2012 ஆம் ஆண்டு 


17.1.2012 அன்று  நீதிபதி லோதா, நீதிபதி கோகலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ள வைகோ இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு:

ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத்தில் அனுமதி பெற முடியாமல் மராட்டிய மாநிலத்தில் அந்த அரசு கொடுத்த அனுமதியை மக்கள் போராட்டத் -தால் ரத்து செய்த பிறகு தூத்துக்குடியில் இந்த ஆலை 1994-ஆம் ஆண்டு நிறுவப் பட்டது.

புலிகளை வைகோ ஆதரிக்க வில்லையாம் ??

புலிகளை வைகோ ஆதரிக்கவில்லை என புத்தகம் போடுகிறார் சுப.வீ ,அதற்கு பேப்பர் கட்டிங் எடுத்து கொடுக்கிறார் கருணாநிதி .

சுப. வீ மீது எங்களுக்கு தனிப்பட விருப்பு வெறுப்பு இல்லை , திராவிட கொள்கையில் பற்று கொண்டவராக சுப.வீ அவர்களை பார்க்கிறோம் , ஆனால் பாவம் அவரின் சகவாச தோஷம் அவரையும் ஆட்டிவிக்கிறது.

13.10.1993 யில் தினமணி நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டதாம் வைகோ புலிகளை ஆதரிக்கவில்லை என.

Monday, April 1, 2013

ஈழத்தமிழர் பிரச்சனை முடிந்துவிடவில்லை!


எங்கள் நெஞ்சின்
நெருப்பு அணையாது!-வைகோ 

இராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாக கருணாநிதியின் பாசிச அரசாங்கத்தால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, மறுமலர்ச்சி தி.மு.க., பெரியார்
திராவிடர் கழகத் தோழர்கள் தேசப்பாதுகாப்புச் சட்டத்தில், கைது செய்யப் பட்டதைக் கண்டித்து,

கோவையில் 8.6.2009 அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத் தில் மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றினார்.


கடலில் மூழ்கி மடியும் அகதிகளின் அவலம்!

இந்திய பிரதமருக்கு வைகோ கடிதம் - 26.05.2006


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய, இலங்கை
அகதிகளைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை, தங்கள் மேலான
கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

“இலங்கைத் தீவில் இருந்து தமிழ்  அகதிகள் கூட்டம், கூட்டமாய்த் தமிழகக்
கடலோரப் பகுதியை நோக்கி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கொந்தளிக் கின்ற கடலில் வருவது மிகுந்த வேதனை தரக்கூடிய காட்சியாக உள்ளது. இலங்கை இராணுவம் தமிழர் வாழும் பகுதிகளில் எப்படிப்பட்ட கொடூரமான தாக்குதல் நடத்துகிறது என்பதை, அங்கிருந்து அகதிகளாக வரும் தாய்மார்கள் கண்ணீரும், கம்பலையுமாக விவரிப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இத்தகைய கொலைவெறித் தாக்குதலில் அப்பாவிப் பெண்களும், குழந்தை களும் பெருமளவில் இறந்தனர் என்ற செய்தி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 7

2011 ஆம் ஆண்டு 

6.9.2011 அன்று  வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரவீந்திரன், பட்நாயக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்’ என்று ஆலை நிர்வாகத் தரப்பில் வாதாடினார்கள்.
வைகோ தன்னுடைய வாதங்களை, ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வைத்தார்.