Showing posts with label 1993. Show all posts
Showing posts with label 1993. Show all posts

Sunday, September 29, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 32

காவிரி நடுவர் மன்ற ஆணையை நடைமுறைப்படுத்தாவிடில்

சோவியத் யூனியன் போல இந்தியா உடைந்து சிதறும்!


கர்நாடகத்தில் முதலமைச்சர் பொறுப்பிற்கு யார் வந்தாலும், அவர்கள் அந்த மாநில அரசியலில் தங்களுக்கு ஒரு தனி இடம் பெற வேண்டும் என்று நினைப் பார்கள். உடனடியாக அதற்கு அவர்கள் செய்வதெல்லாம் தமிழ்நாட்டின் தலை யில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதுதான்.

ஆம்! யார் கர்நாடக முதல்வராக வந்தாலும், “தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் ஒரு சொட்டு கூட தர மாட்டோம்” என்று கூறுவது வாடிக்கை ஆகி விட்டது. கடந்த
40 ஆண்டுகளாக இதே நிலைதான்.காங்கிரஸ், ஜனதா, பிஜேபி எந்தக் கட்சி
ஆட்சியென்றாலும், ஆட்கள் மாறினார்களே தவிர, இந்தப் பல்லவி மட்டும் மாறவேயில்லை.

Thursday, June 20, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 29

மாநில சுயாட்சி முழக்கம்

‘திராவிட நாடு’ பிரிவினை கோரிக்கையைக் கைவிட்ட பேரறிஞர் அண்ணா, நாட்டுப் பிரிவினை கேட்டதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என் றார். இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர், மாநிலங்க ளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும். மாநில சுயாட்சி கொள்கை ஒன்றே, இந் தியாவின் ஒற்றுமைக்கு தீர்வாக இருக்கும் என்று அறிஞர் அண்ணா வரை யறுத்து, அதற்காக முதல்வராக இருந்தபோது குரல் எழுப்பினார்.

அறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்த தலைவர் வைகோ அதே கோட் பாட்டில் நின்று,நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு இருக்கின்றார். மாநில அரசு களைப் பந்தாடும் மத்திய அரசின் போக்கை இடித்துரைத்து, பல சமயங்களில்
வைகோ ஆற்றிய உரைகளில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.


Tuesday, April 2, 2013

புலிகளை வைகோ ஆதரிக்க வில்லையாம் ??

புலிகளை வைகோ ஆதரிக்கவில்லை என புத்தகம் போடுகிறார் சுப.வீ ,அதற்கு பேப்பர் கட்டிங் எடுத்து கொடுக்கிறார் கருணாநிதி .

சுப. வீ மீது எங்களுக்கு தனிப்பட விருப்பு வெறுப்பு இல்லை , திராவிட கொள்கையில் பற்று கொண்டவராக சுப.வீ அவர்களை பார்க்கிறோம் , ஆனால் பாவம் அவரின் சகவாச தோஷம் அவரையும் ஆட்டிவிக்கிறது.

13.10.1993 யில் தினமணி நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டதாம் வைகோ புலிகளை ஆதரிக்கவில்லை என.