Showing posts with label 2012. Show all posts
Showing posts with label 2012. Show all posts

Wednesday, April 3, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 10

2012 ஆம் ஆண்டு 

16.10.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் முன் வைத்த வாதங்களை இன்றும் தொடர்ந்து, காலை 10.45 முதல் பகல் 12.10 வரையிலும் சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடம் பின்வருமாறு வாதிட்டார்.

வைகோ: மாண்புமிகு நீதியரசர்களே, சுற்றுச்சூழல் குறித்து நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியும் என்று கூறினீர்கள். ஆனால், சில நிபுணர் குழுக்களின் நம்பகத்தன்மை எப்படிப் பட்டது, எப்படியெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, சாமர்த்தியமாக கருத்துக்களைச் சொல்லக்கூடியது என்பதை, இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 9

2012 ஆம் ஆண்டு 

9.5.2012 அன்று வழக்கு  உச்சநீதிமன்றத்தில், நீதி அரசர் லோதா, நீதி அரசர் கோகலே, நீதி அரசர் கோகோய் ஆகிய மூவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றத்தில், கடந்த மே 4 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையில் பாஸ்கோ ஜிப்சம், 4,70,000 டன் குவிந்து கிடக்கிறது, அதை விரைந்து அகற்றுவதற்கு ஆலை நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும்” என்று தெரிவித்தது.

இதனைச் சுட்டிக்காட்டி வைகோ, பின்வருமாறு கூறினார்:

Tuesday, April 2, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 8

2012 ஆம் ஆண்டு 


17.1.2012 அன்று  நீதிபதி லோதா, நீதிபதி கோகலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ள வைகோ இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு:

ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத்தில் அனுமதி பெற முடியாமல் மராட்டிய மாநிலத்தில் அந்த அரசு கொடுத்த அனுமதியை மக்கள் போராட்டத் -தால் ரத்து செய்த பிறகு தூத்துக்குடியில் இந்த ஆலை 1994-ஆம் ஆண்டு நிறுவப் பட்டது.

Sunday, April 8, 2012

மருத்துவ சேவையில் -மதிமுக


ஏப்ரல் 15 - ஈரோடு மாவட்டத்தில்...

* இலவச கண் சிகிச்சை முகாம்

* சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும்

* விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்

* உதடு பிளவு மேல் அன்னப் பிளவு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை முகாம் வைகோ தொடங்கி வைக்கிறார்!

இலவச கண் சிகிச்சை முகாம்

தேசியப் பார்வையிழப்புத் தடுப்புத் திட்டம் - ஈரோடு மாவட்ட பார்வை யிழப்புத் தடுப்புச் சங்கம் - இதயம் நற்பணி இயக்கம் டிரஸ்ட் - மாவட்ட மறுமலர்ச்சி இரத்ததானக் கழகம் - அரசன் கண் மருத்துவ மனை ஆகியவை இணைந்து,

Monday, March 19, 2012

இந்திய தேர்தல் ஆணையத்திடம் வைகோ புகார் !


தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் சுதான்சு மீது நடவடிக்கை
எடுக்கக் கோரி, 

இந்திய தேர்தல் ஆணையத்திடம் வைகோ புகார்!

சங்கரன்கோயில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அண்ணா தி.மு.க. பணம் கொடுத்த அப்பட்டமான தேர்தல் குற்றத்தை மறுத்து, ஊழலுக்குத் துணைபோன தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார்
சுதான்சு மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி வைகோ புகார்:

இன்று 19.03.2012 இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையர் சம்பத் அவர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மின் அஞ்சல் மூலமும், தொலைநகல் மூலமும் பின்வருமாறு புகார் அனுப்பியுள்ளார்.

Saturday, March 17, 2012

இடைத் தேர்தல் களத்தில் இணையதள நண்பர்கள்


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களத்தில் கடந்த ஒரு மாதமாக 300க்கு மேற்பட்ட மதிமுக இணையதள நண்பர்களின் வாக்கு சேகரிப்பு பணிகள் 


இனிதே ஆரம்பித்த இணையதளம் 

Tuesday, February 21, 2012

மக்களிடம் செல்வோம்; உறுதியாக வெல்வோம்!

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ம.தி.மு.க. வேட்பாளர் 
டாக்டர் சதன் திருமலைக்குமார்!

மக்களிடம் செல்வோம்;

உறுதியாக வெல்வோம்!

தாயகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வைகோ!

எங்களுடைய அழைப்பின் பேரில் இங்கே வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.