Showing posts with label 2011. Show all posts
Showing posts with label 2011. Show all posts

Monday, April 1, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 7

2011 ஆம் ஆண்டு 

6.9.2011 அன்று  வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரவீந்திரன், பட்நாயக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்’ என்று ஆலை நிர்வாகத் தரப்பில் வாதாடினார்கள்.
வைகோ தன்னுடைய வாதங்களை, ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வைத்தார்.

Sunday, March 31, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 6

2011 ஆம் ஆண்டு 

10.8.2011 உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள், ரவீந்திரன், பட்நாயக் அமர்வில், இன்று முதலாவது வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆலை நிர்வாகத்தின் வழக்கறிஞர், மாசு கட்டுப்பாட்டுக்காக தாங்கள் 500 கோடி ரூபாய் செலவழித்து இருப்பதாகச் சொன்னார்.

உடனே நீதிபதி பட்நாயக், ‘அப்படியானல், அந்த அளவுக்கு மோசமாக மாசுபடும் சூழல் இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘இவ்வளவு செலவழிக்க வேண்டும் என்றால் எவ்வளவு இலாபம் கிடைத்து இருக்கும்?’ என்றும் கேட்டார்.

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 5

2011 ஆம் ஆண்டு 

29.4.2011அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. நீரி நிறுவனம், ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்க வில்லை.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் வைகோ தெரிவித்ததாவது:

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 40 நாள்களுக்குப் பின்னர்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு, நீரி நிறுவனம் ஆய்வுக்கு வந்தது. முதல் சுற்று ஆய்வு, ஏப்ரல் 6, 7, 8, தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஆய்வு, ஏப்ரல் 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு இணங்க, எனக்கும் தகவல் தரப்பட்டு, நானும் ஆய்வின்போது உடன் இருந்தேன். ஆய்வு அறிக்கையை, நீரி தந்தபின், அதனுடைய பிரதிகள் எனக்கும் வழங்கப்பட வேண்டும்; அந்த அறிக்கையின் மீதான எனது கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

Saturday, March 30, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 4

2010 ஆம் ஆண்டு 

28.09.2010 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் படி தீர்ப்பு வழங்கியது.

29.09.2010 அன்று உயர் நீதிமன்ற தீர்ப்பு படி ஆலை மூட சொல்லி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்