மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின், ‘குற்றம் சாட்டுகிறேன்!, ‘I Accuse’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 15.07.2009 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள இராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. இரு நூல்களை யும் பழ.நெடுமாறன் வெளியிட, கவிஞர் இன்குலாப் பெற்றுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழா நிறை வில் ஏற்புரை ஆற்றிய வைகோவின் உரையில் இருந்து...
இந்த நூல், ‘I Accuse’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, ஏற்க னவே வெளியில் உலவிய போதிலும், அதில் புதிதாக சில அத்தியாயங்கள்
இணைக்கப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில், ‘குற்றம் சாட்டு கிறேன்’ எனும் தலைப்போடு இந்த நூல் வெளியிடப்பட வேண்டும் என்று நான்
விரும்பியபோது, எங்கள் வேண்டுகோளை அன்போடு ஏற்றுக்கொண்டு, இங்கே வந்து சிறப்பித்து இருக்கிற அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கும், இந்த மேடையில் வீற்றிருக்கின்ற, தமிழ் ஈழ விடுதலைக்குப்போராடிக் கொண்டு இருக்கின்ற என் இனிய சகோதரர் களுக்கும் என் உளம் நிறைந்து இருக்கின்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.