Showing posts with label புலிகள். Show all posts
Showing posts with label புலிகள். Show all posts

Thursday, May 23, 2013

ஈழத்தமிழர்கள் அநாதைகளா ? நீதியின் கதவை தட்டுகிறேன்...பகுதி 2


இந்திய அரசே நாங்கள் ஈழத்திற்கு நம்பிக்கை துரோகிகள் தான் என ஒப்புகொண்டு உள்ளது ....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.


அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டு உள்ள இரண்டாவது காரணம், இலங்கை யில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அதன் நோக்கத்திற்கும் ஆதரவு திரட்ட, தடையை மீறி ஊர்வலங்கள், ஆர்ப் பாட்டங்கள் நடத்தி வருவது, தமிழகத்தில் ஓர் அமைதியற்ற நிலையை உரு வாக்கவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையிலும் அமைந்து உள்ளது என்பது ஆகும்.

Wednesday, May 22, 2013

ஈழத்தமிழர்கள் அநாதைகளா ? நீதியின் கதவை தட்டுகிறேன் ! பகுதி 1

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர் கள், கடந்த 24.09.2010 அன்று, டெல்லியில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப் புச் சட்டம்) தீர்ப்பு ஆயம் முன்பாக ஆஜராகி, விடுதலைப்புலிகள் அமைப்பின்
மீதான தடை நீட்டிப்பு தொடர்பாக, நடுவண் அரசு வெளியிட்ட அரசு ஆணை மீதான விசாரணையில், தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

டெல்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள் இந்தத் தீர்ப்பு ஆயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை,24.9.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கியது. இந்த விசாரணை,டெல்லி உயர் நீதிமன்ற அறை எண். 2-இல் நடைபெற்றது.

Tuesday, April 2, 2013

புலிகளை வைகோ ஆதரிக்க வில்லையாம் ??

புலிகளை வைகோ ஆதரிக்கவில்லை என புத்தகம் போடுகிறார் சுப.வீ ,அதற்கு பேப்பர் கட்டிங் எடுத்து கொடுக்கிறார் கருணாநிதி .

சுப. வீ மீது எங்களுக்கு தனிப்பட விருப்பு வெறுப்பு இல்லை , திராவிட கொள்கையில் பற்று கொண்டவராக சுப.வீ அவர்களை பார்க்கிறோம் , ஆனால் பாவம் அவரின் சகவாச தோஷம் அவரையும் ஆட்டிவிக்கிறது.

13.10.1993 யில் தினமணி நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டதாம் வைகோ புலிகளை ஆதரிக்கவில்லை என.