Showing posts with label தமிழக அரசு. Show all posts
Showing posts with label தமிழக அரசு. Show all posts

Monday, August 12, 2013

தமிழக அரசுக்குப் புதிய வருவாய் ?

தமிழக அரசுக்குப் புதிய வருவாய் வழி;

சென்னை எழும்பூர் அரசு ஆவணக் காப்பக இயக்குநரின் அரிய யோசனை!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பின்பற்றப்படுமா?

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு எதிரே அமைந்து உள்ள சிவப்புக் கட்டடம், தமிழ்நாடு அரசின் ஆவணக் காப்பகம் ஆகும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில், அரசு ஆவணங்களைப் பாதுகாப்பதற்காகக் கட் டப்பட்டது. இராபர்ட் கிளைவ் காலத்திய அரசு நடவடிக்கைகள் தொடங்கி, இன்று வரையிலான மிக முக்கியமான கடிதங்கள், ஆவணங்கள் அனைத்தும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.

Wednesday, May 15, 2013

அரசுத் தொடக்கப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் விபரீத முடிவை உடனே கைவிட வேண்டும்!

தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழிக் கல்விக்கு வேட்டு வைத்து, அன்னைத் தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவது ஆகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாண வர் கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வ தற் கு ஊக்குவிப்புத் தந்து “மெல்லத் தமிழ் இனி சாகும்; மேலை மொழியே இங்கு ஓங்கும்” எனும் பெரும் விபரீதத்துக்கு தமிழக அரசின் முடிவு வழிவகுக்கும்.

“கடந்த கல்வியாண்டில், 320 அரசுப்பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப் புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஆங்கில வகுப்புகள் தொடங்கப் பட்டன. மொத்தம் 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு 22,400 மாணவர்கள் படித்து வருகின் றார்கள். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுத் தொடக் கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்ற கல்வி அமைச் சரின் அறிவிப்பு தமிழுக்கும், தமிழ் பயிற்சி மொழிக்கும் பெரும் கேடு செய்யும்.
அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை ஆங்கிலவழிப் பிரிவுகளாக மாற் றும் அறிவிப்பை எதிர்க்கிற அனைவரும் ஆங்கில மொழிக்கோ ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக் கொள்வதற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

Monday, April 22, 2013

மது விலையை கட்டுபடுத்த தமிழக அரசு என்ன எல்லாம் செய்கிறது !

மது விலையை  கட்டுபடுத்தி ,மக்களுக்கு வழங்க தமிழக அரசு விதிகளை எந்த அளவிற்கு தளர்த்தி உள்ளது என்பதற்கு இதுவே எடுத்து காட்டு .

இதை எல்லாம் செய்கிற அரசு கல்வி கட்டணத்தையும் , விலைவாசி உயர்வையும் கட்டுபடுத்த முடியவில்லை ...



Wednesday, April 10, 2013

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

ஈழத்தை ஆதரித்து பேசுபவர்கள் மீது வழக்கு தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்தும்,இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித் தும் பேசுபவர்கள் மீது தேச ஒற்றுமைக்கு எதிரான குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக காவல்துறைக்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 4 ஆம் தேதி அன்று ஜெனீவாவில் மாபெரும் மக்கள் கூடல் நிகழ்ச்சியைப் பிரதிபலிக்க தமிழகம் எங்கும் “ஈழத்தோழமை நாள்” கடைப்பிடிக்கப்பட்டது. தாய்த் தமிழகத்து மக்கள் திரண்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்தும், ஈழத் தமிழ் இனப் படுகொலை செய்த சிங்களக் கொலைகார ராஜபக்சே அரசின் மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரியும்,சிங்களருக்கு ஆதர வாக இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும் ஆர்த்தெழுந்து உரிமை முழக்கம் செய்ய மக்கள் நல்வாழ்வு இயக்கம் வேண்டுகோள் விடுத்தது.