உணவுப் பாதுகாப்பு மசோதா ,உழவர்களுக்குப் பாதக மசோதா!
நீண்ட நெடிய சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மசோதா,சோனியா காந்தியின் கனவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனி இந்தியாவில் உணவு இல்லாமல் யாரும் பட்டினி கிடக்கும் நிலை நீக்கப்
பட்டுவிட்டது. 80 கோடி மக்களுக்கு குறைந்த விலையில் அதாவது அரிசி கிலோ ரூ 3 க்கும், கோதுமை கிலோ ரூ.2 க்கும் கிடைக்கும். கிராமப்புறங்களில் 67 சதவிகித மக்களும், நகர்ப்புறங்களில் 50 சதவிகித மக்களும் பயன்பெறுவர்.
மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் அமுலில் இருக்கும். இதற்கு ஆகும்
மானியம் ஆண்டு ஒன்றுக்கு 1,25,000 கோடி ரூபாய்.