Showing posts with label நெல்சன் மண்டேலா. Show all posts
Showing posts with label நெல்சன் மண்டேலா. Show all posts

Sunday, December 15, 2013

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கு அணைந்தது!

சங்கொலி தலையங்கம்

“என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்திற்காகவே என் னை அர்ப்பணித்து இருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போ ராடி இருக்கிறேன்.கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன்.
எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய,எல்லோருக்கும் சமமாக வாய்ப்பு கள் கிடைக்கக்கூடிய, ஜனநாயகப்பூர்வமான,சுதந்திரமான சமூகம் என்ற இலட் சியத் தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்துக் காகத்தான். தேவை என்றால் என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்துக் கா கத்தான்.”

தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தென்னாப்பிரிக்கா உச்ச நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்டபோது, 1964 ஏப்ரல் 23 ஆம் நாள் மேற்கண்டவாறு முழங்கினார் நெல்சன் மண்டேலா.

Friday, December 6, 2013

காலத்தால் அழியாத கறுப்பு மலர் நெல்சன் மண்டேலா

மனிதகுலத்தின் மணிவிளக்கு; உரிமைப்போரின் விடிவெள்ளி; காலத்தால் அழியாத கறுப்பு மலர் நெல்சன் மண்டேலா

நீண்ட நெடிய மனிதகுல வரலாற்றில் மகத்தான தியாகத்தாலும், மரணத்தை எதிர்கொள்ளும் துணிச்சலாலும் அழியாப் புகழ் படைத்த வரலாற்று நாயகரான நெல்சன் மண்டேலா மறைந்தார் என்ற செய்தியால் அகிலமே துக்கத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்துவிட்டது. அம்மாமனிதரின் உயிர் ஓய்ந்து உடல் சாய்ந்தாலும் மண்ணும் விண்ணும் இருக்கும் வரை புகழின் சிகரமாக வாழ் கிறார்.

தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர் இன மக்களுக்கு, வெள்ளைத் நிறத்தினர் பூட்டிய ஆதிக்க அடிமை விலங்குகளை உடைத்தெரிந்த சகாப்தத்தின் பெயர் தான் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்காவில், பழங்குடியினரின் அரச குடும்பத்தில், சோசா இனக்குழுவில் 1918 ஜூலை 18 இல் பிறந்தார். சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். கறுப்பர்களை விடுவிக்க 1912 இல் நிறுவப்பட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்து, இளைஞர் மன்றத்தில் இணைந்து, படிப்படியாக இயக்கத்தில் வளர்ந்து அதன் தலைவரானார்.