தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் தந்தையார் மறைவு!
#மதிமுக் பொதுச்செயலாளர் #வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் .ஜோயல் அவர்களின் தந்தையார் டி.சாமுவேல் அவர்கள் இன்று (03.03.2014) காலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார்.
தகவல் அறிந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று மாலை 5 மணி அளவில், சாமுவேல் அவர்களது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் .ஜோயல், சகோதரர் பென்கர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதுபோது, ப.ஆ.சரவணன், எஸ் .பெருமாள், தி.மு.இராசேந்திரன், கே.எம்.ஏ.நிஜாம், மின்னல் முகமது அலி, கல்லத்தியான், காசிராஜன், வீரபாண்டி செல்லச்சாமி, வே.ரஞ்சன், கணபதிபாண்டியன், சுந்தரராஜ், மணிராஜ், கொம்பையா பாண்டியன், மகாராஜன் மற்றும் தலைமைச் செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய-நகர செயலாளர்கள், தொழிலதிபர்கள், அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாளை 04.03.2014 காலை 7 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம்- திருச்செந்தூர் தாலுகா, மெய்ஞானபுரம் அருகில் இலட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் அன்னாரது நல்லடக்கம் நடைபெறும்.
செய்தி &படங்கள் :- மின்னல் முகமது -நெல்லை
No comments:
Post a Comment