மார்ச் மாத ரௌத்திரம் இதழுக்கு #மதிமுக பொது செயலாளர் #வைகோ அளித்த சிறப்பு பேட்டி யில் மதிமுக அரசு அமையும் போது செய்யப்போகும் செயல்கள் குறித்து விளக்கி உள்ளார் ..
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரௌத்திரம் இதழுக்கு மதிமுக இணையதள நண்பர்கள் சார்பாக வாழ்த்துகளை சொல்லுவோம் ...
அந்த பேட்டியிலிருந்து குறிப்பிட்ட ஒரு கேள்வியை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம் ...
முழு பேட்டியை படிக்க ரௌத்திரம் இதழ் வாங்கி படிக்கவும் ...
தமிழருவி : கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் நடத்தி வரும் தியாக வேள்வி மக்கள் அறிந்ததே .உங்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ,நீங்கள் மறுதலிக்கப்படுகிறீர்கள் என நம்புகிறேன். 2016ல் தமிழக முதல்வராக நீங்கள் வர வேண்டும் என்ற என் கனவி நிறைவேறவே வன்னிக் காட்டிலிருந்து உயிர் தப்பியிருக்கிறீர்கள்.இந்த 40-45 ஆண்டுகால கழக ஆட்சிகளிலிருந்து மக்களை விடுவித்து, மலரப்போகும் மாற்று ஆட்சியில், இந்த இனம் மேம்பட , மண் வளம் பெற என்ன செய்யத்திட்டமிட்டுள்ளீர்கள்.உங்கள் எதிர்காலக் கனவு என்ன ?
வைகோ : எங்களின் இயக்கத்தில் அடுத்த முதல்வர் வைகோ என்று எவரையும் சொல்ல அனுமதித்தது இல்லை நான் ." வைகோ அப்படித்தான் சொல்வார் , வைகோ தான் முதல்வர் " என நீங்கள் சொல்லுங்கள் என்று மதுவிலக்கு நடைபயண நிறைவு விழாவில் பேசி எங்கள் தொண்டர்களை எழுச்சி பெறச் செய்தீர்கள்.எங்கள இயக்கத் தோழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர்களுக்கு உங்கள் மீது பெரிய மரியாதை உண்டு.
2016ல் மறுமலர்ச்சி திமுக தலைமையேற்கும் அரசு அமையுமானால்...
மதுவற்ற தமிழகம் அமைந்திட , புற்று நோய் போல் பரவிக்கிடக்கின்ற ஊழலுக்கு முடிவுரை எழுதிட... சாதி மதப் பூசல்கள் இல்லாத -சகோதரத்துவம் தழைக்கின்ற தமிழகம் உருவாகிட , நம் முன்னோர்களின் பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுத்து அறம் சார்ந்த அரசியல் நடத்திட , இலவசப் போதையில் மக்களை மூழ்கடிக்காத சொந்த குடும்ப நலன்களை முன்னிறுத்துபவர்கள் பதவியில் அமராமல் தடுத்திட ,காழ்ப்புணர்வோடும் , பகைமையுணர்வோடும் எவருக்கும் கேடு விளைவிக்காத , அதிகார துஷ்பிரயோகம் செய்யாத , நெருங்கிக் கிடக்கிற விவசாயிகள் வாழ வழியற்ற கிராம மக்கள் மேம்பட , தமிழக வாழ்வாதாரங்களை மீட்டெடுத்திட ,நீர் நிலைகளைப் பாதுகாத்திட , மீனவர்களின் துயரைத் துடைத்திட அவ்வரசு பணிபுரியும் . இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்கிட , அவர்களின் கனவு நிறைவேறிட , அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான கல்வியும் , சிறந்த மருத்துவமும் கிடைத்திட வழி செய்யும் அரசாக தமிழக உரிமைகளை பாதுகாக்கின்ற அரசாக அவ்வரசு அமையும் ..
No comments:
Post a Comment