கோவைக்கு அறிவிக்கப்பட்ட மோனோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனறு தமிழக அரசுக்கு #மதிமுக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:-
கோவை மாநகரம் 21 லட்சம் மக்கள் தொகையுடன் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்கிறது. கோவைக்கு அடுத்த இடத்தில் உள்ள கொச்சியில் கூட மெட்ரோ ரெயில் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.மேலும் பல நக ரங்களில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவையிலும் மெட் ரோ ரெயில் திட்டதை தொடங்க வேண்டும் என்று 2 ஆண்டுகளாக அரசை வலி யுறுத்தி வருகிறோம்.