Showing posts with label சிவகங்கை. Show all posts
Showing posts with label சிவகங்கை. Show all posts

Saturday, December 7, 2013

பழிக்கு பழி எண்ணம் இளைஞர்களிடம் கூடாது-வைகோ வேண்டுகோள்

மதுரையில் நடந்த வெடிகுண்டு வீச்சில் காயமுற்றோருக்கு ஆறுதல் கூறி னார் #மதிமுக பொது செயலாளர் #வைகோ

மதுரையில் கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று விட்டு வந்த போது சிந்தாமணி அருகே வெடிகுண்டு வீச்சுக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கைதான நபர்கள் ஒரு ஆண்டுக்குப் பிறகு கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வரும் போது பழிவாங்கும் விதமாக வெடிகுண்டு வீசப்பட்டதில் முத்து விஜயன் என்பவர் கொல்லப்பட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Thursday, October 24, 2013

மருதுபாண்டியர்களுக்கு வைகோ அஞ்சலி

மருதுபாண்டியர்களுக்கு வைகோ அஞ்சலி

மருதுபாண்யர்களின் 202 ஆவது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத் தில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

உடன் சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் புலவர் செவந்தியப்பன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்-புதூர் பூமிநாதன், அரசியல் ஆலோச னைக் குழு உறுப்பினர்-எம்.டி.சி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இரா சேந்திரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் உடன் உள்ளனர்

Wednesday, September 25, 2013

எழுச்சியுடன் இளைஞர் அணி -பகுதி 2

எழுச்சியுடன் கழக இளைஞர் அணி!

மாவட்டம் தோறும் கலந்தாய்வுக் கூட்டங்கள்



திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி கலந்தாய்வுக் கூட்டம் 5.9.2013 அன்று பல் லடத்தில் ப.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்.ஆர்.ரத்தினசாமி
வரவேற்புரை ஆற்றினார். என்.ஈஸ்வரன், ப.மணி, சிவக்குமார், மு.சுப்பிர மணி யம், மா.பாலு, அப்புக்குட்டி, எஸ்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

Monday, September 2, 2013

சிவகங்கை இளைஞரணி

சிவகங்கை மாவட்ட திருக்கோஷ்டியூரில் #மதிமுக ஒன்றிய நகர பேரூர் கழக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன் தலைமை வகித்தார். குரு.தங்கபாண்டி யன், முத்துச்சாமி, சார்லஸ், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.