Showing posts with label நடைபயணம். Show all posts
Showing posts with label நடைபயணம். Show all posts

Monday, September 30, 2013

நடைபயணம் நிறைவு ,அடுத்து மத்திய அமைசர்களுக்கு கருப்புக்கொடி

கோவை மாவட்டம் வாளையார் - மதுக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பணியை உடனடியாக நிறைவேற்றக்கோரி, #மதிமுக  சார்பில் நடைபயணம் நேற்று (29.09.13 )நடந்தது.

வாளையார் - மதுக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் (NH 47), கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டு, பாதியில் நிற்கிறது. ரோட்டின் இருபுறங்களிலும், பள்ளம் இருப்பதால், வாகனங்கள் கவிழ வாய்ப்புள்ளது. உடனடியாக பணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி, மதிமுக இளை ஞர் அணி  சார்பில், நடைபயணம் வாளையார் பஸ் ஸ்டாண்ட் அருகே துவங் கியது. மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். 

Tuesday, September 24, 2013

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணம்

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணம்

மறுமலர்ச்சி தி.மு.க. உயர்நிலைக்குழு தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (24.09.2013) கழகத் தலைமை அலுவலகம் ‘தாயக’த்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

தமிழ்நாட்டு அரசியலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை நன வாக்கும் இயக்கமாக, திராவிட இயக்கத்தின் காலத் தேவைக்கான புதிய பரி மாணமாக வார்ப்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம் பீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.

Wednesday, May 15, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 5

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 4 யின் தொடர்ச்சி ....

அப்பொழுது சொன்னேன், எங்களுடைய கோயில்கள்,எங்களுடைய தேவால யங்கள் என்று இன்றைக்கு நாங்கள் எதை நினைக்கமுடியும்.அதற்காக உங்கள் கதவைத்தட்டுகிறோம். எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்
பாருங்கள். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் எங்களுடைய பெண்கள், வயதான வர்கள் கொடூரமாகக் கொல்லப் பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கைகளுக் கு விலங்கு போட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜபக்சே என் கிற கொடியவன் இராணுவத்தில் இருந்தவன். கிருசாஞ்சி படுகொலை  சம்ப வத்தில் கற்பழித்துக்கொல்லப்பட்ட வழக்கில் அவன் சொல்லி விட்டான் நிறை ய பேரை இப்படி புதைத்து இருக்கிறோம் என்று கோர்ட்டில் சொல்லிவிட்டான்.

Tuesday, May 14, 2013

திராவிட இயக்கத்தினைத் தூக்கி நிறுத்தும் ஆற்றல் மிக்கவராக வைகோவைப் பார்க்கிறேன்! -புலவர் புலமைப்பித்தன்

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில்,தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 
நீதிக்கு இது ஒரு போராட்டம் 
நிச்சயம் உலகம் பாராட்டும் 

என்று என்னை ஆளாக்கிவிட்ட அன்புத் தலைவர், என் உயிர் அணுக்களில் எல்லாம் நிறைந்திருக்கின்ற அண்ணன் புரட்சித் தலைவர் அவர்களுக்காக 1973 ஆம் ஆண்டு நான் இந்தப் பாட்டை எழுதினேன். ஆனால்,நாற்பதாண்டு காலம் கழித்து என் அருமை அண்ணன் புரட்சிப் புயலுக்கும் இந்தப் பாட்டு பொருந்தும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 4

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 3 யின் தொடர்ச்சி ....

குடிநீர் இல்லை....

மணலை அள்ளிக்கொண்டுபோய் விற்றீர்களே, எங்கே இருக்கிறது நிலத்தடி நீர்.குடிக்கத் தண்ணீர் கிடையாது. வருகிற வழியெல்லாம் வேதனைக்குரல்
ஒ லிக்கிறது. இந்த நிலைமை இப்படியே நீடித்தால் எங்கே வாழப்போகிறோம். இதை எல்லாம் சிந்தித்தார்களா? மணலை கொள்ளை யடிப்பவர்கள். தங்கள் கஜானாக்களை நிரப்பிக் கொள்வதற்கு வருங்கால சமுதாயத்தையா
அழிப்ப து?

Monday, May 13, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 2 யின் தொடர்ச்சி ....

எங்கள் அறப்போராட்டத்தில் வெல்வோம்; நிரந்தரமாக
மதுக்கடைகள் அகற்றப்படும் காட்சிகளைத் தமிழகம் காணும்!

Monday, May 6, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 1 யின் தொடர்ச்சி ....

காலை பத்திரிகையை படிக்கிறபோது சில நிமிடங்கள் வேறு செய்தியைப்
படிக்க முடியவில்லை. அந்த ஏழைத்தாயையும் தகப்பனையும் தான் நினைத் தேன். நிலத்தை குத்தகைக்கு எடுத்து, வேளாண்மை தொழில் செய்யலாம் என் று இரத்தத்தை வியர்வையாகக் கொண்டு மேனியை வருத்தி உழைக்கிற போ து, ஆயிரம் அடி குழிதோண்டினாலும் தண்ணீர் கிடைக்காது என்கிற அள வுக்கு நிலத்தடி நீர் அபரிக்கப்பட்டுவிட்டதே! இந்தச் சூழலில் ஒரு ஆழ்குழாய் கிணறு
அமைத்து, அதில் கிடைக்கின்ற தண்ணீரைக்கொண்டு, குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து, தானும் தன் குடும்பமும் பிழைக்கலாம் என்று சின்ன பூசாரி நினைத்தார்.

Sunday, May 5, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 1

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பல்லாயிரக்கணக்காகத் திரண்டு இருக்கின்ற மக்களுக்கு, நாளை தமிழகத்தில் நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன? என சூளுரைக்கின்ற நிகழ்ச்சியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுவிலக்குப் பிரச்சார நடைப் பயண நிறைவு நாள் கூட்டமாக நடைபெறும் இந்த மக்கள் சங்கமத்துக்குத் தலை மை தாங்குகின்ற கழகத்தின் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர், கழகத்தின் மாவட்டச் செயலாளர், அடக்குமுறைக் கு அஞ்சாத வேங்கை என் ஆருயிர்ச் சகோதரர் கணேசமூர்த்தி அவர்களே, இன் னும் பல்லாயிரம் பிறைகண்டு வாழ்க! நூறாண்டு வாழ்க! மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்திற்கு வலிமையான அரண்களை வார்ப்பித்து வாழ்க! என்று இலட்சோப இலட்சம் தொண்டர் களினுடைய வாழ்த்துகளை, எந்நாளும் பிறந்தநாளை கொண்டாடாத அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுமா னால்,அதற்கு அனுமதிக்காத, பண்புடைய வரான, இந்நாளில் எங்கள் வாழ்த்துகளைப் பெற் றுக்கொண்டு இருக்கின்ற கழக அவைத்தலைவர் ஆருயிர் அண் ணன் திருப்பூர் துரைசாமிஅவர்களே, கழகப் பொருளாளர் ஆருயிர்ச் சகோதரர் டாக்டர் மாசி லாமணி அவர்களே, துணைப் பொதுச்செயலாளர் மூன்று போர்ப் படை நடைப் பயணத்திலும் நம் கண்மணி களை விழியை இமை காப்பதுபோல் காத்து உடன் வந்துள்ள என் ஆருயிர் இளவல் மல்லை சத்யா அவர்களே, இந்த மூன்றுஅணி களையும் வார்ப்பித்து தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் பணியாற்றி வரு கிற வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆருயிர் தம்பி ஜீவன் அவர்களே,

Saturday, May 4, 2013

தமிழ் இனத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றவராகத் திகழ்கிறார் வைகோ!-தமிழருவி மணியன்

நேர்மையாளராக, நெறி சார்ந்தவராக, தமிழ் இனத்துக்காகத்

தன்னை அர்ப்பணிக்கின்றவராகத் திகழ்கிறார் வைகோ!


தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, கழகப் பொதுச்செயலா ளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட விழிப்புணர் வுப்பிரச்சாரத்தையொட்டி, 18.04.2013 அன்று உடுமலைப்பேட்டைப் பொதுக்கூட் டத் தில் தமிழருவி மணியன் அவர்கள் உரை மணியன் ஆற்றினார்.

விவரம் வருமாறு:

அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் 2016 இல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிகிறபொழுது, தமிழகத்தின் கோட்டையில் முதல்வராகஅமர இருக் கின்ற என் நெஞ்சு நெகிழ்ந்த நிலையில், மிகுந்த பாசத்தோடு,ஒரு தலைவனை, காமராஜருக்குப் பிறகு நான் நேசித்துக்கொண்டிருக்கிறேன் என்றால், அந்தத் தலைவனாக இருக்கிற வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த மகத்தான அவை
யை நான் வணங்கி மகிழ்கிறேன்.

Tuesday, April 30, 2013

புரட்சி தொடங்கிவிட்டது; மறுமலர்ச்சி நிகழ்ந்தே தீரும்!

தமிழ்நாட்டுத் தாய்மார்கள் போர்க்கோலம் பூண்டுவிட்டார்கள்;
டாஸ்மாக் கடைகளை எதிர்த்து வீதிக்கு வருகின்றார்கள்!
பொள்ளாச்சியில் வைகோ முழக்கம்

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி -இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், 16.04.2013 அன்று பொள்ளாச்சியில் பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்த்து
முழக்கங்களுடன் தொடங்கியது.நடைப்பயணத் தொடக்க விழாப் பொதுக் கூட்டத் தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

வீரத்தாலும், விவேகத்தாலும்,விருந்தோம்பும் பண்பாலும், கொடை உள்ளத் தாலும், வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்று இருக்கின்ற கொங்கு மண்டலத்தில், பொள்ளாச்சித் திருநகரில், பயணம் வெல்க; தமிழகத்தின் எதிர் காலத்தில் நலம் விழைக என உயர்ந்த உள்ளத்தோடு வாழ்த்தி இருக்கின்ற
பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித் துக் கொள்கின்றேன்.

Monday, April 29, 2013

பாவேந்தர் பாரதிதாசன், பாவலர் செய்குதம்பி பாடல்களில் மதுவிலக்கு

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”

என்று வாழ்நாள் எல்லாம் முழங்கிக் கொண்டிருந்தவர் பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 புதன் இரவு 10.15 மணி - 1964 ஏப்ரல் 21; வாழ்ந்தகாலம் 72 ஆண்டுகள்
71 மாதங்கள் மூன்று வாரங்கள், இரண்டு நாட்கள்)

தமிழர் தலைவர் வைகோ அவர்களை ஆசிரியராகக் கொண்டு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அதிகார பூர்வ வார ஏடாக உலாவரும் சங்கொலி ஏட்டின் தலைப்பு வரிகளாக ‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு’ வரிகளும் புரட்சிக்கவிஞரின் வரிகளாகும். நெஞ்சு றுதிமிக்க வீர உள்ளத்திற்குச் சொந்தமான பாவேந்தர் மதுவிலக்கு பற்றி பாடிய பாடல்கள் இதோ:

Sunday, April 28, 2013

வைகோவின் அறப்போர் வாகை சூடும்!


முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, பொள்ளாச்சியில் 16.04.2013 அன்று, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் தொடங்கிய மூன் றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணத்தை வாழ்த்தி, பேரூர் ஆதி னம் இளையபட்டம் மருதாசல அடிகளார் ஆற்றிய உரை:

முழுமையான மதுவிலக்கு கோரி,மூன்றாவது கட்ட நடைபயணத்தை,இந்தப் பொள்ளாச்சி நகரில் தொடங்குகின்ற, உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கின்ற பாராட்டுதலுக்கு உரிய ஐயா வைகோ அவர் களுக்கும், உங்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள் கின்றோம்.

Saturday, April 27, 2013

வைகோவின் போராட்டம், தமிழகத்துக்கு விடியலைத் தரும்!

காந்தி நடத்திய கள்ளுக்கடை மறியல்,
இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தது!
வைகோவின் போராட்டம், தமிழகத்துக்கு விடியலைத் தரும்!

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், 16.04.2013 அன்று பொள்ளாச்சியில் தொடங்கிய மூன் றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணத் தொடக்க விழாப் பொதுக் கூட்டத்தில், பேராசிரியர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய உரை:-
இதயத்தில் இலட்சியங்களையும்,இன்னுயிரில் தமிழ் உணர்வையும் ஏந்திய வாறு, ஒரு இராணுவக் கட்டுப் பாட்டோடு இயங்குகின்ற ஒரு இளைஞர் பட் டாளத்துக்குத் தலைவராக வைகோ அவர்கள் திகழ்கின்றார்கள்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -25



Friday, April 26, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -24









மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -23




மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -22

மாற்று சக்தி மதிமுக.,தான்- வைகோ 

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணத்தை மேற்கொண்டு இருக்கும் வைகோவும் மதிமுகவினரும் 9 வது நாள் பயணத்தில் நேற்று(24.04.13)  ஈரோடு மாவட்டம் அரச்சலூருக்கு வைகோ தொண்டர்களுடன் நடைபயண மாக வந்தார். 

அரச்சலூரில் புதன்கிழமை இரவு 8 மணி அளவில்  டைபெற்ற மதுஒழிப்பு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகத்தில் மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரு கின்றன. மதுவின் பிடியில் இருந்து இவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக நடைபயணம் மேற்கொண்டு வருகிறோம். மதுவின் தீமைகளை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். 

Thursday, April 25, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -21



கம்பனும் மதுவிலக்கும்

‘முழு மதுவிலக்கு; அதுவே எமது இலக்கு’ என நெஞ்சிலே உறுதி கொண்டு தமிழர் தலைவர் வைகோ அவர்களும், மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்களும் ஊர் ஊராக, வீதி வீதியாக நாட்டு மக்களைச் சந்தித்து வருகின்றனர். முதற் கட்ட மாக 12.12.2012-இல் உவரியில் நடைப்பயணம் எழுச்சியுடன் தொடங்கப் பட்டது. 25.12.2012-இல் கூடல் நகரில் நிறைவுற்றது.

2013 பிப்ரவரி காஞ்சியிலே தொடங்கி பிப்ரவரி 28-ல் மறைமலை நகரிலேயும், ஏப்ரல் 16-இல் பொள்ளாச்சியிலே தொடங்கி ஏப்ரல் 28-இல் ஈரோட்டிலும், ஜூன் 20-இல் விழுப்புரம் தொடங்கி ஜூன் 30-இல் கடலூரில் நிறைவடையும் வண் ணம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மது விலக்குப் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்திட இருக்கிறார்.நாடெங்கும் நடை பெறும் நிகழ்ச்சியில் மதுவின் கொடுமைகளை விவரித்து ஒழித்தாக வேண்டி யது மது என்று ஓங்கி முழக்கமிட்டு வருகிறார்கள்.

Wednesday, April 24, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -20

பூரண மதுவிலக்கு அமலில் வரும் வரை 
எங்கள் போராட்டம் தொடரும்.-வைகோ

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணத்தை மேற்கொண்டு இருக்கும் வைகோவும் மதிமுகவினரும் 8 வது நாள் பயணத்தில் நேற்று(23.04.13)  திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் இருந்து, ஈரோடு மாவட்டம் கொடு முடி அருகே உள்ள ஒத்தக்கடைக்கு வைகோ தொண்டர்களுடன் நடைபயண மாக வந்தார். இரவு 8 மணி அளவில் ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

பொதுக்கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. அவைத்தலைவர் குழந்தை வேலு தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி வர வேற்று பேசினார்.

பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:–