Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Sunday, December 1, 2013

மத்திய அரசின் ரகசிய சதி வேலை - வைகோ குற்றச்சாட்டு

இந்தியக் கடற்படைத் தளபதி இலங்கை பயணமும்,கோத்தபய ராஜபக்சேயின் இந்தியப் பயணமும்,மத்திய அரசின் ரகசிய சதி வேலை - #வைகோ குற்றச் சாட்டு

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ராஜபக்சே அரசு, ஈழத் தமிழ் இனப்படு கொ லையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு தான் நேரடியாகவும், மறை முகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது.

2007 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந் தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு தகவல்கள் தந்தும், புலிகளுக்கு வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடிக்கச் செய்தும், அப்போரில் உதவியது. அதனால்தான், யுத்தத்தில் தாங்கள் வெல்ல முடிந்தது என்றும், இப்போரை இயக்கியதே இந்தியாதான் என்றும் அதிபர் ராஜபக்சேவும், இலங் கை அமைச்சர்களும் கூறினர்.

Sunday, September 1, 2013

நாட்டை திவாலாகும் நிலை

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு
நாட்டை திவாலாகும் நிலைக்குத் தள்ளி விட்டது

#வைகோ அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான மக்கள் விரோத மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்தி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரு கிறது. ஜூன் மாதத்தில் இருந்து 6ஆவது முறையாக பெட்ரோல் விலையை யும், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 8ஆவது முறையாக டீசல் விலையை யும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன.

Monday, August 26, 2013

குற்றவாளிக் கூண்டில் காங்கிரசு ஆட்சி!

பெருந்தலைவர் காமராசரை காங்கிரசு கட்சி மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட் டது. அந்தக் கட்சியின் நூற்றாண்டு விழா மலரிலேயே பட்டாபி சீத்தாராமய்யா படத்தை காமராசர் படமாக வெளியிடும் அளவுக்கு மறதி நோய் அவர்களுக்கு முற்றிப்போய்விட்டது.அகில இந்திய அரசியலையே ஆட்டிப் படைத்த அந்தத் தலைவரின் நூற்றாண்டு விழாவைக்கூட அவர்கள் நாடு முழுக்க சிறப்போடு கொண்டாட வில்லை. ஆனால், கடந்த மாதம் 15 ஆம் நாளில் அவரது பிறந்த நாளை நாடு முழுக்க அவரது உருவப்படங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டி தேசிய திலகங்கள் விழா எடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தின!
வேறொன்று மில்லை, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதல்லவா? வாக்கு வேட்டைக்கு “காமராசர் முகமூடி” தேவை அல்லவா? எனவேதான் இந்த திடீர் கூத்து!

Friday, August 16, 2013

நாட்டின் வளர்ச்சியை நாடாத காங்கிரஸ்

நாட்டின் வளர்ச்சியை நாடாத காங்கிரஸ் ஆட்சி!

இந்திய வரலாற்றில் அதிகமான ஊழலைச் செய்து சாதனை படைத்த அரசு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாகும். 2ஜி,
ஆதர்ஷ், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள், நிலக்கரி ஒதுக்கீடு,
ஹெலிகாப்டர் பேரம் என பல ஊழல்களைப் புரிந்து, மக்கள் பணம் கொள்ளை போவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே காரணமாகும்.

ஊழலில் வளர்ச்சியைக் கண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாட்டின்
பொருளாதார வளர்ச்சியில் அக்கறை காட்டவே இல்லை. நாட்டின் நிதிப்பற் றாக்குறை 4.89 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பணவீக்கமோ ஏழு சதத் தைத் தொடுகின்றது. உணவுப் பொருட்களின் விலை உயர்வோ ஆறு சதம். ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு 60 ரூபாயைத் தொடும் நிலையில் மதிப்பு இழந்துள்ளது என்கின்றது ஒரு செய்தி.