அண்மையில் பிரித்தானியாவில் உள்ள சேனல்-4 என்ற தொலைக்காட்சி, தமி ழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உத்தியோக பூர்வத்தொலைக்காட்சியான
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப் பிரியாவின் இறுதி நிமிடக் காட்சி ஒன்றை ஒளி பரப்பியது. மாபெரும் இன அழிப்புப் போர் ஒன்றின் முடிவில் அகப்பட்ட பெண் ஒருத்தி மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் போர்க்குற்றங்களின் ஆதாரமாக அந்தக் காட்சி அமைந்துள்து. குறித் த காட்சி ஈழத்தை மாத்திர மின்றி உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
சிங்கள அரசு நடத்திய மாபெரும் குற்றங்கள் நிரம்பிய இனப்படு கொலைப் போரின் ஆதாரமாகவும்,அது அமைந்திருந்தமை சிங்கள அரசையும் உலுப்பியி ருக்கின்றது.
ஒரு போரில் குழந்தைகளையும்,பெண்களையும் முதியவர் களையும் கொல் வது மரபல்ல.அவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களை பாதுகாப்பான பிரதே சங்களுக்குச் செல்லுமாறு கோருவது பண்டைய கால போர் மரபு. ஆனால், சிங்கள அரசைப் பொறுத்தவரையில் குழந்தைகள் பெண்கள், முதியவர்கள் என்று யாவரையும் ஒரு இடத்தில் வருமாறு அழைத்துவிட்டு அந்த இடத்தில் குண்டுகளைப் போட்டு கொலை செய்வதே போர் மரபு.ஈழப் போர் தொடங்கிய காலம் தொட்டு குழந்தைகளும், பெண்களும் தொடர்ச்சியாக அழிக்கப் பட்டிருக் கிறார்கள். ஏனெனில் பெண்கள் ஒரு இனத்தை உருவாக்குகிறார்கள். குழந்தை கள் ஒரு இனத்தின் புதிய சந்ததி.அதன் காரணமாகவே ஈழத் தமிழ் இனத்தை அழிப்பதற்காக குழந்தைகளையும் பெண் களையும் சிங்கள அரச படைகள்
தேடித் தேடிக் கொலை செய்கின்றன.