Monday, November 4, 2013

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கோமாவில் இருந்தாரா ?

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இன்று காலை சந்தித்துப் பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், தமிழகத்தில் அதிமுக அரசு ஏதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறது, கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.

வெங்காய அரசியல்!

சங்கொலி தலையங்கம் 

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதைக் கூட மக் கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக
வெங்காயத்தின் விலை ஆகாயத்தை நோக்கி பறந்துகொண்டேயிருப்பதுதான்
கவலைப்படச் செய்திருக்கிறது. இந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும்
இன்றியமையாத பொருள் ‘வெங்காயம்’.நாடு முழுவதும் இதிலே ‘மட்டும்’ஒரு மைப்பாடு இருக்கிறது.

வெங்காயத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக மத்திய அரசு கூறுவது, வெங் காயம் உற்பத்தி குறைவு என்பதுதான்.வெங்காய உற்பத்தியில்முன்னணி மாநி லங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மற்றும்
தமிழ்நாடு ஆகியவற்றிலிருந்து நாட்டின் தேவையான அளவுக்குஉற்பத்தி செய் யப்படவில்லை; என்று அரசு கூறுவதைப் பார்த்தால் மேலோட்டமாக சரியான
காரணம் போன்று தெரியும். ஆனால், உண்மை நிலையோ வேறு.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழுவை மிரட்டும் ஆளும் தரப்பு

ஆளும் கட்சியின் தவறுகளை தட்டிகேட்டும் மக்களையும் கட்சிகளுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் ஆளும் தரப்பு ..

கோவை மாநகராட்சியின் நூறு வார்டுகளில்,தினமும் சேகரிக்கப்படும் 800 டன் குப்பைக் கழிவுகள், போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டிலுள்ள, மாநகராட்சி கழிவுநீர்ப் பண்ணையில் கொட்டப்படுகிறது. இதனால், போத்தனூர், கோண வாய்க்கால்பாளையம்,மகாலிங்கபுரம்,வெள்ளலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். 

குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குப்பை கழிவு களை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க.வும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும்,  எவ்வித பயனுமில்லை. அதே நேரத்தில், தற் போதைய ஆளும் கட் சியினர்,முன்பு எதிர்கட்சியாக இருந்தபோது, இப்பிரச் னையில், தீவிரம் காட்டி னர். தற்போது, பதவிகளுக்கு வந்தபின், கண்டுகொள் வதில்லை.பிற கட்சிகளும் மவுனமாகிவிட்டனர்.

Sunday, November 3, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 28

நாள்:-23.06.2008

இந்தியப் பிரதமர், இலங்கை செல்லக் கூடாது!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினை யில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் மண்ணின் மைந்தர்களா ன தமிழர்களுக்குப் பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, இலங்கை அரசு மற்றும் அதன் இராணுவ அதிகாரிகளின் அறிக்கைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்திய அரசின் வெளிப்படையான, ரக சியமான, நயவஞ்சகமான கண்டிக்கத்தக்க செயல்களால், அது மேலும் தெளி வாகத் தெரிய வருகிறது.

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 1

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

அனைவருக்கும் வணக்கம்.

‘சோழமண்டல இயல் இசை நாடக மன்றத்தினர் விழா எடுப்பதாகவும், அதில் ‘இயல்’ குறித்து உரையாற்றிட வேண்டும் என்றும் அழைத்த நேரத்தில், கலை வளர்த்த தரணியில், இசை வளர்த்த தஞ்சையில், தமிழர்களின் மகோன்னத மான மன்றத்தில், உரை ஆற்றுகின்ற வாய்ப்பு எனக் கருதி அகமகிழ்ந்து, நான் இசைவு அளித்தேன்.

கல்விக் காவலர், மாட்சிமைக்கு உரிய துளசி அய்யா வாண்டையார் அவர்கள் தலைமை தாங்குவார்கள் என்று, உதயகுமாரும், துரை. பாலகிருக்ஷ்ணனும் என்னிடத்தில் கூறியபோது, அது திகட்டாத தேறலாக என் நெஞ்சில் இனித்தது. என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் வைத்து அவரை மதிக்கின்றவன் நான். இன்றுதான் முதன்முதலாக அவர்களோடு ஒரு மேடையில் பங்கு ஏற்கின்ற பேறு எனக்கு கிடைத்து இருக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க இசைவு அளித்தமைக்கும், அரிய உரை தந்தமைக்கும், இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.