Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

Wednesday, December 4, 2013

காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தி டெல்டா பகுதிகளில் காவிரி உரிமை மீட்புக்குழு வினர் நேற்று (03.12.13) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் #மதிமுக உட்பட பல கட்சிகள் பங்கேற்றன .

தஞ்சையில் 

ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் உதய குமார், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், வக்கீல் நல்லதுரை, அயனாவரம் முருகேசன் உள்பட மீட்புக்குழு நிர்வாகிகள் பங் கேற் றனர்.

Thursday, October 31, 2013

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தீர்மானம்-மதிமுக மாணவர் அணி

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தீர்மானம்-#மதிமுக மாணவர் அணி 

திருச்சியில் நடந்த மாணவர் அணி  மாநில துணைச்செயலாளர்கள் கூட்டத் தில்  ம.தி.மு.க. பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் மாநில மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் கூட்டம் 27.10.13 அன்று நடைபெற்றது.

Wednesday, September 4, 2013

மணப்பாறை மதிமுக கூட்டம்

மணப்பாறையில் #மதிமுக சார்பில் தந்தை பெரியார் சிலை அருகில் பொதுக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. 

நிர்வாகிகள் முருகேசன், அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நகர பொறுப்புக்குழுத்தலைவர் எம்.கே.முத்துப்பாண்டி வரவேற்றுப் பேசினார். 

Sunday, August 25, 2013

வைகோவின் உழைப்பும் வீண் போகாது

எவருடைய உழைப்பையும் இயற்கை விரயமாக்கியதில்லை...

#வைகோ வின் உழைப்பும் வீண் போகாது!


தீரர்கள் கோட்டமாம் திருச்சி மாநகரில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக நிதி
வழங்கும் விழாவும், பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று
இடங்கள் என்னும் முத்திரை பதித்த மாணவர்களைப் பாராட்டுகின்ற அரிய தோர் விழாவும் மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் நடந்து முடிந்தது.திருச்சி மாவட்ட மாணவர் அணி நடத்திய பாராட்டு விழா நிகழ்வானது கஜப்ரியா அரங்கத்திலும், நிதி வழங்கும் விழா அருண் தங்கும் விடுதி அரங்கத்திலும் நடந்தேறியது.

Sunday, August 18, 2013

திருச்சியில் திரண்ட உணர்வாளர்கள்!

தமிழ் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்குத் துணைநின்ற
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திருச்சியில் கருப்புக்கொடி!
#வைகோ தலைமையில் திரண்ட இன உணர்வாளர்கள்!

மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் பெருமையைப் பாடாத கவிஞர்கள் இல்லை.சோழநாடு சோறுடைத்து என்னும் பெருமைக்கு தாயாக நின்று சோழ வளநாட்டைக் காத்து வருகின்றவள், வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி அன்னை.

இந்தக் காவிரி ஆற்றில் ஒரு துளி நீரும் இல்லாது வறண்டு பாலையாய் காட்சி
தந்ததைக் கண்ணால் பார்க்க இயலாமல் தவித்து வந்தோம். பெருக்கெடுத்து
வரும் காவிரியை வழிமறித்து இரண்டாம் நூற்றாண்டுகளிலேயே கல்லணை யை எழுப்பி, வேளாண் பெருங்குடி மக்களைக் காத்தவன் கரிகாலன்.

Tuesday, August 13, 2013

அணு உலையில் உற்பத்தியை தொடங்க கூடாது

#மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அணுக்கதிர் வீச்சு என்ற அபாய வளையத்திற்குள் உலகமே சிக்கி இருக்கிறது. உலகில் பல நாடுகள் அணு உலைகளை மூட முடியாமல் அதன் ஆயுள் காலம் 40 ஆண்டுகள் தான் என நிர்ணயித்து இருந்தாலும் பத்து, பத்து ஆண்டுகளாக நீட்டித்துக்கொண்டே செல்கின்றன. தற்போது உலகம் முழுவதும் 440 அணு உலைகள் உள்ளன.

Monday, May 27, 2013

தமிழர்களின் மீது தொடர்ந்து ராஜபக்சே கொடூரங்களை நடத்தி வருகிறார்

தமிழர்கள் மீது தொடர்ந்து ராஜபக்சே கொடூரங்களை நடத்தி வருகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:

திருச்சி தீரர்களின் கோட்டையாக விளங்கி வருகிறது. அண்ணாதுரை முதல் பல தலைவர்களும் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை திருச்சியில் தான் அறிவித்துள்ளனர். அந்த வகையில் ம.தி.மு.க. வும் முக்கிய முடிவுகளை திருச்சியில் இருந்து அறிவித்துள்ளது.

Tuesday, May 7, 2013

திருச்சியில் மதிமுகவினர் மதுவிலக்கு பிரச்சாரம்

இன்று (06.05.2013 ),ம.தி.மு.க. சார்பில் மண்ணச்சநல்லூர் பகுதியில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பிரச்சார பயணம் நடந்தது. பிரச்சார பயணத்துக்கு ம.தி.மு.க. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்புசெல்வம் தலைமை தாங்கினார்.

பூனாம்பாளையம், காளவாய்பட்டி, திருவெள்ளறை, சாலைப்பட்டி, எஸ்.
மேட்டூர், வீராணி, சிறுப்பத்தூர், ஓமாந்தூர், ராசாம்பாளையம், அய்யம் பாளையம், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, தளுதாளப்பட்டி, தத்தமங்கலம் ஆகிய ஊர்களில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.