உலக ஜீவராசிகளின் பரிணாமப் பல்லுயிர் பெருக்கத்தின் இருப்பிடமாக கடல் விளங்குகிறது. முதல் ஜீவராசியான ஒரு செல் உயிரினம் அமீபா. அது நீரில் தான் தோன்றியது.அதுதான் பல்கிப் பெருகி பல்வேறு பரிணாமங்களை அடைந்து மீன்களாக உருவானது. இப்பொழுது நீரில் மட்டுமே வாழ்ந்த ஜீவராசி கள் இடம் பெயர வேண்டிய பரிணாமத்தில் நீரில் வாழ்ந்து நிலத்தை சார்ந்து வாழ்கின்ற, தவளை,ஆமை, முதலை, நண்டு போன்றவை நிலத்தில் முட்டை யிட்டு பொரிக்கச் செய்து பின் நீரில் வாழ்பவைகளாக பரிணாமம் அடைகிறது. தவளைக் குஞ்சுகளை தலைப்பிரட்டை என்று அழைப்பர். அவை பார்ப்பதற்கு மீன் குஞ்சுகளைப் போன்று இருக்கும். வளர வளர உடல் பகுதியில் உள்ள
துடுப்புக்கள் கால்களாக மாறித் தவளையாக உருமாறும்.அடுத்த இடப்பெயர்வு என்பது நிலத்தில் வாழ்ந்து நீரை சார்ந்தவையாக உருவெடுக்கிறது. இப்படி யான சங்கிலித்தொடர் பரிணாமம் தான் பல்லாயிரம் கோடி ஆண்டுகளில் ஒன் றை ஒன்று சார்ந்து இன்றைய மனித இனம் உருவாகி முழுமை பெருகிறது. காலச்சூழற்சியில் அடுத்து என்ன நிகழும் என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். நீரின்றி அமையாது உலகு என்பது நமது மூதுரை.உலகத் தின் மூன்றில் இரண்டு பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.