Showing posts with label பொது வாக்கெடுப்பு. Show all posts
Showing posts with label பொது வாக்கெடுப்பு. Show all posts

Tuesday, October 22, 2013

ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு காலத்தின் கட்டாயம்!

ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு காலத்தின் கட்டாயம்!

விருதுநகர் மாநாட்டில் மு.செந்திலதிபன் முழக்கம்

செப்டம்பர் 15,விருதுநகரில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில்,#மதிமுக அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன்
ஆற்றிய உரையில் இருந்து...

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வீறுகொண்டு எழுந்த விருதுநகர் மண்ணில், கழகம் நடத்துகின்ற அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு மிகுந்த சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டு
இருக்கின்றது. முக்கியமான கால கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக் கின்ற இந்த மாநாட்டில்,“சுயநிர்ணய உரிமையும் பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றிடப் பணித்த தலைவர் வைகோ அவர்களுக்கு எனது நன்றி.

Saturday, May 4, 2013

ஐ.நா. மன்றத்திலும் அவரது குரல் ஒலித்திட வாழ்த்துகிறேன்!

வைகோ, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில்

தமிழ் ஈழ மக்களின் குரலாக ஒலித்திருக்கிறார்!

ஐ.நா. மன்றத்திலும் அவரது குரல் ஒலித்திட வாழ்த்துகிறேன்!


“சுதந்திரத் தமிழ் ஈழம்; பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுந் தட் டு வெளியீட்டு நிகழ்ச்சி, 13.04.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பழ.நெடுமாறன் அவர்கள் நிகழ்ச்சி யில் ஆற்றிய உரை வருமாறு:

சகோதரர் வைகோ அவர்கள் சுதந்திரத்தமிழ் ஈழம் குறித்த பொது வாக்கெடுப் பை ஐ.நா.சபையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிருந்து பெல் ஜியத்திற்குச் சென்று, அதனுடைய தலைநகரான பிரஸ்ஸ்ல்சில் ஐரோப் பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில், இந்தக் குரலை ஓங்கி ஒலித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.அதற்காக தமிழர்கள் அவருக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

Wednesday, May 1, 2013

தமிழ் ஈழம் ,பொது வாக்கெடுப்பு -முதலில் உலகுக்கு சொன்ன வைகோ

பெல்ஜியம் ஆய்வரங்கத்தில் வைகோ பேசிய உரையின் சுருக்கம் .

“ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த இந்த ஆய்வு அரங்கத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகளே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் களே, அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, 7 கோடித் தமிழ் மக்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென்கோடி மாநில மான தமிழகத்தில் இருந்து நான் வந்து இருக்கின்றேன்.

என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈவு இரக்கம் இன்றிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்கும், குறிப்பாக, வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், குழந்தைகளுக்கும்,ஆயுதம் ஏந்திப் போராடி இரத்தம் சிந்தியும், மகத்தான உயிர்த்தியாகம் செய்தும் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், வீராங் கனைகளுக்கும் என் வீர வணக்கத்தை, அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

Friday, April 26, 2013

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்”-பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்,11.02.2013 அன்று, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில், மதிமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார்.

சென்ற பகுதியில் வெளியான அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:


இங்கிலாந்துதான் பொறுப்பு

இதைத்தான், 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், நான் நெஞ்சார நேசிக் கின்ற பிரபாகரன் பிறந்த நாளில், லண்டன் மாநகரில் நாடாளுமன்றத்துக்கு
அருகில் இருக்கின்ற ஒரு அரங்கத்தில்,பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கள் அமர்ந்து இருந்த அந்தக்கூட்டத்தில் சொன்னேன்.

Thursday, April 25, 2013

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்”-பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்,11.02.2013 அன்று, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில், மதிமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார்.

சென்ற பகுதியில் வெளியான அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:


‘ஈழத்தை அமைப்பது இளைஞர்களின் கடமை’

இப்போது, இந்தியாவின் நிலைமையைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். 1947 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்றது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து பழங்குடியினரும்,பாகிஸ்தான் படையினரும் ஆயுதங்களோடு காஷ்மீருக்கு உள்ளே ஊடுருவி விட்டார்கள் என்று, காஷ்மீர் மன்னர் ஹரிசிங், நேருவுக்குத் தாக்கல் அனுப்பு கிறார். ‘எங்களைப் பாதுகாக்க வாருங்கள்;இந்தியப் படை களை அனுப்புங்கள்.இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதற்கு நான் ஒப்புதல் தருகிறேன்; அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறேன், என்கிறார்.

Wednesday, April 24, 2013

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்”-பகுதி 1

ஒவ்வொரு தேசிய இனமும்,
தனித்தனி அரசுகளை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு;
அதுவே, தன்னாட்சி உரிமை; சுய நிர்ணய உரிமை!
இதுதான் உலக நியதி!

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்,11.02.2013 அன்று, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார். 

அவரது உரை வருமாறு:

பல்லாயிரம் ஆண்டுகளான பழம் பெருமையும், உலகம் போற்றுகின்ற உயர்ந்த நாகரிகமும், வளையாத நீதிக்கு உரிய அரசும், தழைத்து ஓங்கிய சோழவள நாட் டில், தஞ்சைப் பெரு உடையார் இராஜராஜேச்சுரமாக உலகோரின் விழிகளை யும், கருத்தையும் ஈர்த்து இருக்கக்கூடிய இந்த மாநகரில்,200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட புகழுக்கு உரிய தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில்  நடை பெறுகின்ற இந்தக் கருத்து அரங்கத்துக்குத் தலைமை ஏற்று இருக்கின்ற,தஞ்சை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அன்புக்குரிய வழக்கறிஞர் மதியழகன் அவர்களே,

Tuesday, April 23, 2013

சுடரை உங்களிடம் தருகிறேன்; இனி, நீங்கள் கொண்டு செல்லுங்கள்! -வைகோ

“சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” வைகோ நூல் மற்றும் ஒளிப்படக் குறுந் தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி, 13.04.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து...

இந்தக் கரிய இரவு விரைந்து ஓடி மறைந்து விடும்.
புள்ளினங்கள் குரல் எழுப்புகின்ற
வைகறை மலர்கின்ற விடிகாலை வெளிச்சத்தில்
துப்பாக்கி ரவைகள் என் மார்பிலே பாயும்.
என் மேனியில் இருந்து சிதறுகின்ற இரத்தத்துளிகள்
காலை வானத்தைச் செக்கர் மயமாக்கட்டும்
நான் மடிந்ததற்குப் பின்னர்
என் உடல் மண்ணில் புதைக்கப்பட்ட இடத்தில்
எழுகின்ற எளிமையான கல்லறையின் மீது,
புற்கள் அடர்ந்து படரும்;
அங்கே ஒரு மலர் பூக்கும்
அந்த வழியாகப் போகின்ற வழிப்போக்கர்களே
அருகில் வாருங்கள்
அந்த மலரை உங்கள் நாசியால் முகருங்கள்
அப்போது,
என் ஆன்மாவை நீங்கள் வருடியது போல
உங்கள் மூச்சுக் காற்றின் வெப்பத்தை நான் உணர்வேன்

Monday, April 22, 2013

அடுத்த கட்ட நகர்வு என்ன? எனத் திக்குத் தெரியாத நிலையில் திகைத்து நின்றபோது, வழிகாட்டியவர் வைகோ!- கொளத்தூர் மணி


சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில், கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற மாநாட்டிலும், தஞ்சை வழக்குரைஞர் மன்றத்திலும் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பு, இங்கே நூலாகவும், குறுந்தட்டாகவும் வெளியிடப்பட்டு இருக்கின்றது. தமிழ்
ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்துகின்ற வகையில், இந்த வெளி யீடு கள் அமைந்து இருக்கின்றன.

தமிழர்களுக்குச் சிக்கல்கள் நேருகின்ற பொழுதெல்லாம் முகம் கொடுக்கின்ற
ஒரு போராளி, மதிப்பிற்கு உரிய அண்ணன் வைகோ அவர்கள், இன்றைய சூழலில், நமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொடுத்து இருக்கின் றார்.

Sunday, April 21, 2013

தமிழ்ச் சமூகத்தின் தலைசிறந்த வழக்குரைஞர்; வழிகாட்டி வைகோ !-திருமுருகன் காந்தி


சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில்,திரு முருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.........

வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களைத் தமிழ்ச் சமூகம் கடந்து கொண்டு இருக்கின்ற சூழலில், ‘தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும்’ என்பதை வலியுறுத்துகின்ற வகையில், ஒரு மிக முக்கிய நாளாகத்   தான், வைகோ அவர்களுடைய நூல் மற்றும் ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு விழா வை நான் கருதுகிறேன்.

Thursday, April 18, 2013

"செங்காந்தள் புரட்சி" -தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு

சென்ற 13-04-2013இல் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மகாலில் நடைபெற்றது.

இது குறித்து திரு,பாரி மைந்தன் தெரிவித்த்  செய்தி 

1976 இல் இனி சிங்களரோடு சேர்ந்து வாழ முடியாது தனி ஈழம் ஒன்றே தீர்வு என தந்தை செல்வா கூறிய வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நாளான மே 14 ஆம் நாளை "தமிழீழ விடுதலை நாள்" என அறிவித்து உள்ளோம். 


மேலும் அந்தநாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடத்து வது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. ஈழ உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெறலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்காந்தள் மலரினை சூடுவதே எங்கள் இலக்கு ஆகவே இந்த மாணவர் போராட்டத்திற்கு "செங்காந்தள் புரட்சி" என்று பெயரிட்டுள்ளோம்.

Thursday, April 4, 2013

இந்திய பார்லி - ஈழம் பொது வாக்கெடுப்பு

கடந்த 1920 ல், பெருங்காமநல்லூரில் ரேகைச் சட்டத்தை எதிர்த்து வெள்ளை -யர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான 16 தியாகிகளுக்கு வீர வணக்க கூட்டம் உசிலம்பட்டியில் நடந்தது. அதில், கலந்து கொண்டு வைகோ பேசியதாவது:

பெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூட்டில் இறந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். பெருங்காமநல்லூர் சம்பவத்தை ஒரு சமூகத்தினரின் போராட்டமாக பார்க்காதீர்கள்.