Showing posts with label தமிழருவி மணியன் உரை. Show all posts
Showing posts with label தமிழருவி மணியன் உரை. Show all posts

Wednesday, May 1, 2013

மூன்று தமிழர் தூக்கை உடனே அரசு ரத்து செய்ய வேண்டும்: வைகோ, கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், தமிழருவி மணியன் உரை

மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கம் சார்பில் மரணதண்டனையை எதிர்த்து சென்னை தியாகராயநகர் முத்துரங்கன் சாலையில் நேற்று (30.04.13 )மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழின கட்சித் தலை வர்களும், இயக்கத்தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தனர்.

இந்நிகழ்வுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க கொளத்தூர் மணி அவர்கள் தொகுத்துவழங்கினார். நிகழ்வில் சிறையில் வாடும் பேரறிவாள னின் தாயார் அற்புதம் அம்மாள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக்கட்சித்தோழர் பண்ருட்டி வேல்முருகன், காந்திய மக்கள் இயக் கத்தோழர் தமிழருவி மணியன், தபெதிக தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்ப் புலிகள் தோழர் நாகை.திருவள்ளுவன, தோழர் தியாகு, மக்கள் நல்வாழ்வு இயக்க தோழர் கண.குறிஞ்சி, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், த.தே.பொ.க தோழர் பெ.மணியரசன், இரா.அதிய மான், மே பதினேழு இயக்கப்பொறுப்பாளர் மற்றும் பலர் உரையாற்றினார்கள்.