Showing posts with label 1990. Show all posts
Showing posts with label 1990. Show all posts

Thursday, June 20, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 29

மாநில சுயாட்சி முழக்கம்

‘திராவிட நாடு’ பிரிவினை கோரிக்கையைக் கைவிட்ட பேரறிஞர் அண்ணா, நாட்டுப் பிரிவினை கேட்டதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என் றார். இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர், மாநிலங்க ளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும். மாநில சுயாட்சி கொள்கை ஒன்றே, இந் தியாவின் ஒற்றுமைக்கு தீர்வாக இருக்கும் என்று அறிஞர் அண்ணா வரை யறுத்து, அதற்காக முதல்வராக இருந்தபோது குரல் எழுப்பினார்.

அறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்த தலைவர் வைகோ அதே கோட் பாட்டில் நின்று,நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு இருக்கின்றார். மாநில அரசு களைப் பந்தாடும் மத்திய அரசின் போக்கை இடித்துரைத்து, பல சமயங்களில்
வைகோ ஆற்றிய உரைகளில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.


Saturday, May 25, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 26

இந்தியாவில் மதவெறியை வளர்க்க பாரதிய ஜன தா கட்சி செயல்படுவதைப் போலத்தான் இந்திரா காங்கிரசும் மதவெறியைத் தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயன்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன


முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

இந்து-இந்தி-இந்து ராஷ்டிரம் என ஒலிக்கும் ஓங்காரக் குரல்களால்
இந்தியா பல துண்டுகளாகும்!

இந்தியாவின் கோடானகோடி பிற்பட்ட சமூக மக்களுக்கு சமூகநீதி கிடைக்கும்
வகையில்,மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வி.பி.சிங் தலை மையிலான தேசிய முன்னணி அரசு உத்தரவு பிறப்பித்தவுடனேயே, அவ்வர சுக்கு பாரதிய ஜனதா கட்சி கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற முடிவு செய்தது. நேரிடையாக சமூகநீதிக்கு எதிராக கருத்து கூறாமல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று பிரச்சார இயக்கத்தை தீவிரமாக்கியது.

பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர்கோவில் எழுப்புவோம் என்று பாரதிய ஜன தா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி வரிந்துகட்டிக் கொண்டு ரத யாத்திரை மூலம் ரத்தக்களறி நடத்துவதற்கு ஆயத்தமானார்.

Monday, May 20, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 25


பிற்படுத்தப்பட்ட வேடர் குலத்தைச் சேர்ந்த வால்மீகிதானே இராமாயணத்தை எழுதினார்.மகாபாரதத்தை எழுதிய வியாசர் யார்? பிற்படுத்தப்பட்ட மீனவர் குலத்தைச் சார்ந்தவர்தானே? பகவத் கீதையைத் தந்த கிருஷ்ணன் யார்? 
பிற்படுத்தப் பட்ட யாதவர் குலத்தில் பிறந்தவர் தானே.-வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.


திராவிட இயக்கத்தின் இலட்சிய முழக்கம்

திராவிட இயக்கத்தின் இலட்சியக்கோட்பாடுகள் எவை என்பதை தந்தை பெரி யாரும், பேரறிஞர் அண்ணாவும் வகுத்தளித்து இருக்கிறார்கள்.

சமூக சீர்திருத்தம்; சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் காணல்; தமிழின உரி மை; தமிழ்ப் பண்பாடு காத்தல்; மொழி உரிமை; தமிழ்நாட்டின் வாழ்வுரிமை;
சமூக நீதி; மதச்சார்பின்மை; பெண் விடுதலை; மாநில சுயாட்சி; பொருளாதார
தற்சார்பு.

Thursday, May 9, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 23

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.


‘வரலாறு சரியான தீர்ப்பை எழுதும்’

தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமர் ஆனவுடன், ஈழப்பிரச்சினையில்
முந்தைய ராஜீவ் அரசின் கொள்கைகள் தூக்கி வீசப்பட்டு, இந்திய அமைதிப் படை யும் படிப்படியாக இந்தியா திரும்பியது. ஆட்சியை இழந்த முன்னாள்
பிரதமர் ராஜீவ்காந்தி, தொடர்ந்து விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வந்தது மட்டுமின்றி, இந்தியாவில் பஞ்சாப், அசாம் தீவிர வாத இயக்கங்களுக்கும் விடுதலைப்புலிகள் தமிழ்நாடு வழியாக ஆயுதங்கள்
கொடுத்து வருவதாக பயங்கரமான குற்றச்சாட்டுகளைக் கூறினார். அப்போது
தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு மீது கடும்பழி சுமத்து வதன் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்தும் இச்செயலில் ஈடுபட்டார்.

Tuesday, May 7, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 22

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.


ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்க
பிரதமர் வி.பி.சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமர் பதவி ஏற்றதும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசின் அணுகு முறை யில் மாற்றம் ஏற்பட்டது.

பிரதமர் வி.பி.சிங் 1990, மார்ச்சு 31க்குள் ‘இந்திய அமைதிப்படையின் கடைசி சிப்பாய் இந்தியா திரும்புவார்’என்று தேதி நிர்ணயம் செய்தார்.அதன்படி இந் திய அமைதிப்படை இந்தியா திரும்பத் தொடங்கியது.ராஜீவ்காந்தியின் அரசி யல் முதிர்ச்சியற்ற நடவடிக்கையால், இலங்கைப் பிரச்சினையில் சிங்கள
அரசோடு ஒப்பந்தம் போட்டு, இந்திய இராணுவத்தையும் அனுப்பி, தமிழ் மக் களைக் கொன்று குவித்து அவமானகரமான தோல்வியைச் சந்தித்து, இந்தியா சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நின்றது.