Showing posts with label 1988. Show all posts
Showing posts with label 1988. Show all posts

Thursday, June 20, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 29

மாநில சுயாட்சி முழக்கம்

‘திராவிட நாடு’ பிரிவினை கோரிக்கையைக் கைவிட்ட பேரறிஞர் அண்ணா, நாட்டுப் பிரிவினை கேட்டதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என் றார். இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர், மாநிலங்க ளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும். மாநில சுயாட்சி கொள்கை ஒன்றே, இந் தியாவின் ஒற்றுமைக்கு தீர்வாக இருக்கும் என்று அறிஞர் அண்ணா வரை யறுத்து, அதற்காக முதல்வராக இருந்தபோது குரல் எழுப்பினார்.

அறிஞர் அண்ணாவின் பாசறையில் வளர்ந்த தலைவர் வைகோ அதே கோட் பாட்டில் நின்று,நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு இருக்கின்றார். மாநில அரசு களைப் பந்தாடும் மத்திய அரசின் போக்கை இடித்துரைத்து, பல சமயங்களில்
வைகோ ஆற்றிய உரைகளில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.


Saturday, April 20, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 17

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே


பிரதமர் இராஜீவ்காந்தி -வைகோ கடும் மோதல்!


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பிரதமர் இராஜீவ்காந்தியின் அணுகுமுறை யும் அவர் எடுத்த நடவடிக்கைகளும் தமிழினத்திற்கு எதிராகவும், சிங்கள இன
வெறியர்களுக்கு ஆதரவாகவும் இருந்தது. இந்திய அமைதிப்படையை அனுப்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தை பூண்டோடு கருவறுக்க உத்தரவிட்டார். விடு தலைப்புலிகள் ‘‘afterall two thousand boys’- புலிகள் வெறும் இரண்டாயிரம் பையன் கள். இந்தியா நினைத்தால் ஒரே நாளில் அழித்துவிடுவோம் என்று மார்தட்டி னார்.

பிரதமர் இராஜீவ்காந்தியின் ஆணவ நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் தலை வர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.பல சந்தர்ப்பங்களில் இராஜீவ்காந்தி யுடன் மிகக் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இந்திய நாடே தலை யில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருந்த, ‘இளம் பிரதமர்’ என்று புகழாரம் சூட்டப் பெற்று, அசைக்க முடியாத சக்திகொண்டவராக பத்திரிக்கைகள் உருவ கப்படுத்திய பிரதமர் இராஜீவ்காந்தியை, இலங்கைத் தமிழர் பிரச்சினையில், உண்டு இல்லை என்று தலைவர் வைகோ ஒரு கை பார்த்துவிட்டார்.

Friday, April 19, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 16

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


தனி நபரின் அகந்தைக்குத் தீனி போடுவதற்காகவே
ஈழத்தில் இந்தியா போர் நடத்துவதா? -வைகோ 

இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தியின் கட்டளையை நிறைவேற்ற,இந்திய அமைதிப்படை, தமிழீழத்தில் கொலை வெறி கொண்டு அலைந்து,மாவீரர் பிரபாகரனையும் அவரது தளகர்த்தர்களையும் கொன்றொழிக்க வேட்டை நடத்திய போது, இந்திய நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ தமிழினத்தின் சார்பாக இந்திய அரசின் அடக்குமுறையை, இனப்படுகொலைகளை அம்பலப் படுத்தி, நமது இனத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்தார்.

Wednesday, April 17, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 15

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே


“ஒரு பிரபாகரனை அழித்தால் 
ஆயிரம் பிரபாகரன்கள் தோன்றுவார்கள்”- வைகோ

விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற உத்திரவு போட்ட இந்தியப் பிரதமர் இராஜீவ்   காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற,  இந்திய அமைதிப்படை வெறிகொண்டு அலைந்தது.1988 ஜனவரியில் தேடுதல் வேட்டை என்ற பெயரால், மூன்றாயிரம் தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலி கள் என்ற முத்திரை குத்தி, இந்திய இராணுவம் கைது செய்து சிறை வைத்தது.

தமிழ் மக்களின் வீடுதோறும் சென்று இளைஞர்களையும், இளம் பெண்களை யும் வேட்டையாடிய இந்திய இராணுவத்தை எதிர்த்து தமிழீழம் கொந்தளித்த போது, அன்னையர் முன்னணி சார்பில் இந்திய இராணுவத்தைக் கண்டித்து,
மட்டக்களப்பு மாமாங்கத் திடலில்,வீரத்தாய் அன்னை பூபதி அம்மாள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

Tuesday, April 16, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 14

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே


ஆயுதம் ஏந்தவும் தயார்!- வைகோ

தமிழீழ விடுதலைப்  போராட்ட பயிர் செழிக்க,வேருக்கு நீர் ஈந்த புரட்சித் தலை வர், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.,1987, டிசம்பர் 24 ஆம் நாள் மறைந்தார்.புரட்சித்
தலைவரின் மறைவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், இந்திய அரசின் இராணுவ வெறியாட்டம் இலங்கைத் தமிழர் பகுதிகளில் தீவிரமாகியது. இந்திய அமைதிப்படை, புலிகள் தலைவர் பிரபாகரனைத் தேடி வேட்டை நாயாக அலைந்தது.வடக்கே சாவகச் சேரி, வடமராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளிலும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக் களப்பு மாவட்டங்களிலும் அமைதிப் படை தேடுதல் வேட்டை என்ற பெயரால் அப்பாவித் தமிழ் மக்களை வேட்டையாடினர்.