“ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த இந்த ஆய்வு அரங்கத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகளே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் களே, அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, 7 கோடித் தமிழ் மக்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென்கோடி மாநில மான தமிழகத்தில் இருந்து நான் வந்து இருக்கின்றேன்.
என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈவு இரக்கம் இன்றிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்கும், குறிப்பாக, வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், குழந்தைகளுக்கும்,ஆயுதம் ஏந்திப் போராடி இரத்தம் சிந்தியும், மகத்தான உயிர்த்தியாகம் செய்தும் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், வீராங் கனைகளுக்கும் என் வீர வணக்கத்தை, அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
