மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் #வைகோ அறிக்கை
தமிழ் நாட்டில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொது மக்கள், குறிப்பாக பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்ற செய்திகள் தினந் தோறும் வந்துகொண்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட் டுத் தலங்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி, இலவசங்களை வாரி வழங்குவதன் மூலம் தமி ழக அரசு பண்பாட்டை குழிதோண்டி புதைத்து வருவதுடன், சமூக அமைதியை யும் சீர்குலைத்து வருகிறது.
கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அனைத்துக் கும் மதுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. நெஞ்சைப் பிளக்கும் வகை யில், 5 வயது, 6 வயது சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள்கூட பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. நாட்டின் எதிர்கால ஒளி விளக்குகளாக பிரகாசிக்க வேண்டிய இளைஞர்களும், மாணவர்களும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.