Showing posts with label இனப் படுகொலை. Show all posts
Showing posts with label இனப் படுகொலை. Show all posts

Thursday, May 2, 2013

ஈழத் தமிழினம் தனித் தமிழ்த் தேசம் அமைக்க உதவுவோம்...!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின், ‘குற்றம் சாட்டுகிறேன்!, ‘I Accuse’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 15.07.2009 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள இராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. இரு நூல்களை யும் பழ.நெடுமாறன் வெளியிட, கவிஞர் இன்குலாப் பெற்றுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழா நிறை வில் ஏற்புரை ஆற்றிய வைகோவின் உரையில் இருந்து...

இந்த நூல், ‘I Accuse’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, ஏற்க னவே வெளியில் உலவிய போதிலும், அதில் புதிதாக சில அத்தியாயங்கள்
இணைக்கப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில், ‘குற்றம் சாட்டு கிறேன்’ எனும் தலைப்போடு இந்த நூல் வெளியிடப்பட வேண்டும் என்று நான்
விரும்பியபோது, எங்கள் வேண்டுகோளை அன்போடு ஏற்றுக்கொண்டு, இங்கே வந்து சிறப்பித்து இருக்கிற அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கும், இந்த மேடையில் வீற்றிருக்கின்ற, தமிழ் ஈழ விடுதலைக்குப்போராடிக் கொண்டு இருக்கின்ற என் இனிய சகோதரர் களுக்கும் என் உளம் நிறைந்து இருக்கின்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, May 1, 2013

எங்கள் நெஞ்சின் நெருப்பு அணையாது!

ஈழத்தமிழர் பிரச்சனை முடிந்துவிடவில்லை!

இராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாக கருணாநிதியின் பாசிச அரசாங்கத்தால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, மறுமலர்ச்சி தி.மு.க., பெரியார்
திராவிடர் கழகத் தோழர்கள் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில், கைது செய்யப் பட்டதைக் கண்டித்து, கோவையில் 8.6.2009 அன்று நடைபெற்ற பிரம்மாண்ட மான பொதுக் கூட்டத்தில் கழகப்பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையில் இருந்து...

இனி என்று விடியல்? இருள் எப்பொழுது விலகும்? என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற உலகத் தமிழர்களின் பார்வை கவனம் எல்லாம் ஆறரைக் கோடி தமிழ் மக்கள் வாழுகிற தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிற நேரத்தில், இனி அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை வளரும் இளம் தலைமுறை யினரிடம் எடுத்துச் சொல்கின்ற வகையில், அருமைச் சகோதரர் கொளத்தூர் மணி அவர்கள், அரியபல கருத்துகளை காலத்தின் அருமை கருதி இரத்தினச் சுருக்கமாகக் கூறி அமர்ந்து இருக்கின்றார்.

Saturday, February 16, 2013

பன்னாட்டு விசாரணை தேவை-வைகோ

ஈழத்தமிழர் படுகொலை : பன்னாட்டு விசாரணை தேவை
ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும்

வைகோ கோரிக்கை

இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும், தமிழ் இன அழிப்பு தொடர்வதும் குறித்து, அனைத்து உலக நாடுகளின் மனசாட்சியின் கதவுகள் தட்டப்படும் சூழலில், ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டம், வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற இருக்கின்றது.

Tuesday, March 20, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இழப்போம்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மாபெரும் திருப்புமுனை ஆண்டாகும்.ஈழத்தமிழ் இளைஞர்களின் போர்க் குணத்தையும் புறநானூற்றுப் போர் மரபில் வந்த இளைஞர் கூட்டம் களச்சாவிற்கு அஞ்சாதவர்கள் என்பதையும் இன எதிரி களுக்கு உணர்த்திய ஆண்டு. 1983 ஜூலை 15 போர்க்களத்தில் சிங்களப்படை யால் சுற்றிவளைக்கப் பட்ட சார்லஸ் ஆண்டனி என்ற தளபதி,தான் எதிரி களால் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு உடன் நின்ற போராளிக்கு கட்டளையிட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர் நினைவாகவே மாவீரர் பிரபாகரன் தனது முதல் மகனுக்குச் சார்லஸ் ஆண்டனி எனப் பெயரிட்டார்.

Monday, March 19, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே .

1983 கருப்பு ஜுலை : இந்திராவின் கவனத்தை ஈர்த்த வைகோ 

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் இரத்தம் தோய்ந்த “கறுப்பு ஜூலை” ஆகும். 1983 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே,
சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே, தமிழர்கள் மீது கட்ட விழ்த்து விட்டிருந்த வன்முறைகள் ஜூலை மாதம் கோர நர்த்தனம் ஆடின. ஜூலை 25 ஆம் நாள், சிங்கள இராணுவம்நடத்திய இனப்படுகொலையில் ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர் பகுதிகளில் தீவைப்புகள்,கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இந்த கொடூரங்களின்
உச்சகட்டமாக, ஜூலை 27 ஆம் நாள், வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த விடுதலை இயக்கத் தலைவர்கள் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட போராளிகள் 50 பேர் கண்ட கோடாலிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறையில் ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தமிழீழத்தில் 1983, ஜூலையில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளை அறிந்து தமிழ்நாடு கொந்தளித்தது. உலகம் முழுவதிலிருந்தும் வரும் பத்திரிகைகள் இலங்கை இனப்படுகொலை பற்றிய நடுங்க வைக்கும் செய்திகளை வெளியிட்டன.

Wednesday, March 14, 2012

இந்தியா இனக்கொலையின் பங்காளி

சங்கரன்கோயில் இடைதேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பல்வேறு கிராமங்களில் ம.தி.மு.க வின் பொது செயலளார் வைகோ பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின் இடையே ஹலோ எப் எம் வானொலிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிடில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் துடைத்து எறியப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Tuesday, February 28, 2012

இனப்படுகொலைக் குற்றவாளி இலங்கை அரசை ஆதரிக்காதீர்

இனப்படுகொலைக் குற்றவாளி இலங்கை அரசை ஆதரிக்காதீர்;
கூட்டுக் குற்றவாளியாக ஆகாதீர்!


பிரதமருக்கு வைகோ கடிதம்!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, இன்று (28.2.2012) எழுதி உள்ள கடிதம்:

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம், இலங்கையின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.