Friday, May 31, 2013

ஆலையை அகற்றும் எங்கள் தர்ம யுத்தம் தொடரும்! வைகோ

ஸ்டெர்லைட் ஆலை குறித்து பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது!

ஆலையை அகற்றும் எங்கள் தர்ம யுத்தம் தொடரும்!

வைகோ அறிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் இன்றைய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரி யத்தின் ஆணையை எதிர்த்து ஆலை நிர்வாகம், தமிழகத்தில் உள்ள மேல் முறையீட்டு ஆணையத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும், அந்த ஆணையத்தின் தீர்ப்பின் மீதுதான், பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் இருக்கின்றன என்று இந்தத் தீர்ப்பாயத்தில் ஆட்சேபனை தெரிவித்திருந்தேன், அதுகுறித்து தீர்ப்பு ஆயம் தந்துள்ள பதில் விளக்கம் என்ன என்பதை தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தால்தான் தெரியும்.

Thursday, May 30, 2013

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்

தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்

ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை மூடுமாறு, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம், மார்ச் 29 ஆம் தேதி ஆணை பிறப்பித்ததால், ஆலை மூடப்பட் டது. அந்த ஆணையை இரத்து செய்யக்கோரி, ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடுத்த வழக்கு மீதான விசாரணை, டெல்லி முதன்மைத் தீர்ப்பு ஆயத்தில் நடைபெற்று வருகின்றன. நிறைவுக் கட்ட வாதங்கள் இன்று முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் வைகோ பின்வருமாறு வாதத்தை எடுத்து வைத்தார்:

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக... தடைக்காக அரசாணையில் கூறப்பட்ட காரணங்கள் நொறுங்கிப் போயின!-பகுதி 2

இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத் தைத் தடை செய்திருப்பதால் மற்ற உலக நாடுகளும் தடை செய்துள்ளன. இலங்கைத் தமிழர்கள் ஆறுதலும்,உதவி யும் பெற இந்தியாவிற்கும் வர முடியாதநிலை உள்ளது.இதையும் கடந்து 
இந்தியாவிற்குள் வருகின்றவர்கள் விடு தலைப்புலிகள் என்று சொல்லி சிறை முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ள னர். தமிழர்கள் கண்ணீரில் மிதக்கிறார் கள்.

எனவே, நீதியின் கதவைத் தட்டுவதற்காக இந்தத் தீர்ப்பாயத்தின் முன்பாக உள்ளேன்.

தீர்ப்பாயம் முன்பு வைகோ வாதம் 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

மாண்புமிகு நீதிபதி அவர்களே!

திரு. பிரபாகரன் அவர்கள் உரையாற்றுகின்ற மேடையில் அமைக்கப்பட்டுள்ள வரைபடத்தை ஒருகணம் பாருங்கள். தமிழ் ஈழத்தின் எல்லைகளைக் குறிக் கின்ற இப்படத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள்தான் தமிழ் ஈழமா கக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

Wednesday, May 29, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 27

பாபர் அந்நியர் என்றால் கைபர், போலன் கணவாய் வழியே வந்த நீங்கள் யார்?

பாபர் அந்நிய நாட்டிலிருந்து வந்தவர் என்று விமர்சிப்பவர்களை நோக்கி நான்
கேட்பதெல்லாம் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? மத்திய ஆசியாவிலிருந்து ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு சிந்து நதி தீரத்திற்குள் நுழைந்த கூட்டம் தானே உங்கள் கூட்டம். -வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

1991ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.அமெரிக்காவின் ஆக் கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையாக முழங்கி ய தலைவர் வைகோ அவர்கள், இந்தியா யார் பக்கம் நிற்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பியது தொடர்பாக 1991, பிப்ரவரியில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தலைவர் வைகோ ஆற்றிய உரை..

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக... தடைக்காக அரசாணையில் கூறப்பட்ட காரணங்கள் நொறுங்கிப் போயின!-பகுதி 1

தீர்ப்பாயம் முன்பு வைகோ வாதம்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப் பட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2010 நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதி களில் விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையின்போது மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இரண்டு நாள்களும் கலந்து கொண்டார். தீர்ப்பாயத்தின் எல்லா விசா ரணை நாள்களிலும் வைகோ கலந்து கொண்டு பங்கேற்றார் என்பது குறிப்பி டத் தக்கது.