Tuesday, April 10, 2012

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்! -பாசமுடன் வைகோ

இமைப்பொழுதும் நீங்காது

என் இதயத்துடிப்போடும்

இரத்தச் சுழற்சியோடும்

கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

நாட்கள் பல ஆகிவிட்டனவே,உங்களுக்கு மடல் எழுதி ?

போராளிக்குத் தோல்வி இல்லை; போராட்டக் காரனுக்கு ஓய்வும் இருக்க முடியாது. களங்களைக் கடந்து கொண்டே இருப்பவனுக்கு, வெற்றியும், தோல்வியும் ஒன்றேதான்.

இடைத்தேர்தல் என்பது நடைபெறும் ஆட்சியின் மக்கள் மதிப்பீட்டைக் கணக்கிடும் உரைகல்லாக இருந்தநிலை, இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

Sunday, April 8, 2012

மருத்துவ சேவையில் -மதிமுக


ஏப்ரல் 15 - ஈரோடு மாவட்டத்தில்...

* இலவச கண் சிகிச்சை முகாம்

* சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும்

* விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்

* உதடு பிளவு மேல் அன்னப் பிளவு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை முகாம் வைகோ தொடங்கி வைக்கிறார்!

இலவச கண் சிகிச்சை முகாம்

தேசியப் பார்வையிழப்புத் தடுப்புத் திட்டம் - ஈரோடு மாவட்ட பார்வை யிழப்புத் தடுப்புச் சங்கம் - இதயம் நற்பணி இயக்கம் டிரஸ்ட் - மாவட்ட மறுமலர்ச்சி இரத்ததானக் கழகம் - அரசன் கண் மருத்துவ மனை ஆகியவை இணைந்து,

Monday, March 26, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 4

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

இந்தியாவின் மனிதாபிமானக் கொடி அரைக்கம்பத்தில் பறப்பது ஏன் ?

இலங்கையில் சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே அரசு தமிழர்களை நர வேட்டையாடிய நேரத்தில் மாநிலங்களவையில் பதின்மூன்று கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வந்து தலைவர் வைகோ எடுத்துரைத்த நெகிழ்ச்சி மிக்க கருத்துகள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரின் இதயத்தில் ஈரம் கசியச் செய்தது .1984 ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் வைகோ கொண்டு வந்த ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து 1984 ஆகஸ்டு 16 ஆம் நாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மாநிலங்கள் அவையில் உரை ஆற்றினார்.அப்பொழுது இந்திராகாந்தி தெரிவித்த கருத்து.அதுவரை இந்திய அரசு கடைபிடித்து வந்த ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த அணுகுமுறை யில் மாற்றம் உருவாகியிருப்பதை உலகத்திற்கு உணர்த்தியது .

Saturday, March 24, 2012

வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்


வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அறவழியில், காந்திய வழியில் தொடர்ந்து கடற்கரையோர மக்கள், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். இடிந்தகரையில், உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர். பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் தொடர்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அணுஉலைக்கு எதிராக நேற்று (23.3.2012) பாளையங்கோட்டையில், மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏராளமானவர்கள் பங்கேற்ற போராட்டம், வன்முறைக்குத் துளியும் இடமின்றி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டபின், போராட்டத்தில் கலந்துகொண்ட சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரை, காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு அவர்களை, நேற்று நள்ளிரவுக்கு மேல் இராசபாளையத்திற்கு அருகே கைது செய்துள்ளனர். அவர் மீதும் பொய்யான வழக்குப் போடப்பட்டுள்ளது.

Thursday, March 22, 2012

பாளையங்கோட்டை - ஜவஹர் திடலுக்கு அணிதிரண்டு வாரீர் வைகோ அழைப்பு

பகை நாட்டு இராணுவம் எல்லை தாண்டி ஆக்கிரமிக்க குவிதல் போல, பல்லாயிரக்கணக்கில் காவல்துறையினர் இடிந்தகரை வட்டாரத்தில் முற்றுகை யிட்டுள்ளனர். கூடங்குளம், கூட்டப்புளி, ஊத்தங்குளி, உவரி உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் காவல்துறை எல்லாச் சாலை களிலும் எவரும் நடமாட முடியாத அளவுக்கு மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளது. எனினும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களும், அணுமின் நிலையத்தை எதிர்க்கும் மக்களும் எந்த அடக்கு முறைக்கும் அஞ்சாது தங்களை வருத்திக் கொண்டு அறப்போர் நடத்தி வருகின்றனர். சூறைக்காற்றிற்கும், சுறா மீனுக்கும், திமிங்கலத்திற்கும் அஞ்சாது கடல் மேல் படகுகள் செலுத்தும் உடலில் உரமும், நெஞ்சில் திறனும் கொண்ட மீனவ மக்கள், அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடு கிறார்கள் என்றால் அவர்களுக்காக அல்ல. தென் தமிழ்நாட்டை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அழிவிலிருந்து பாதுகாக்கவே போராடுகிறார்கள்.