Showing posts with label கண்டனம். Show all posts
Showing posts with label கண்டனம். Show all posts

Monday, October 7, 2013

ரயில்வே கட்டண உயர்வு - வைகோ கண்டனம்

ரயில்வே கட்டண உயர்வு #வைகோ கண்டனம்

காங்கிஸ் கூட்டணி அரசு ஆட்சியில் நீடிக்கும் கடைசி மணித்துணி வரை மக்களை வாட்டி வதைக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் என்பதற்கு இன்னொரு உதாரணம்தான் ரயில் கட்டண உயர்வு.

கடந்த ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இரயில் கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்திவிட்டு, பிப்ரவரி மாதம் ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு இல்லை என்று மோசடி அறி விப்பைச் செய்தார் ரயில்வே அமைச்சர்.

Saturday, April 13, 2013

உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்குதல்: வைகோ கண்டனம்

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் சிங்கள குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி, அச்சு இயந்திரங்களை நொறுக்கி தீவைத்து கொளுத்திய செயலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இன்று (ஏப்ரல் 13ஆம் தேதி) அதிகாலை 4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியா தெருவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதம் தாங்கியவர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கு பணியாற்றியவர்களை அடித்து விரட்டி விட்டு, அங்குள்ள அச்சு இயந்திரங்களை உடைத்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.


Wednesday, April 10, 2013

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

ஈழத்தை ஆதரித்து பேசுபவர்கள் மீது வழக்கு தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்தும்,இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித் தும் பேசுபவர்கள் மீது தேச ஒற்றுமைக்கு எதிரான குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக காவல்துறைக்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 4 ஆம் தேதி அன்று ஜெனீவாவில் மாபெரும் மக்கள் கூடல் நிகழ்ச்சியைப் பிரதிபலிக்க தமிழகம் எங்கும் “ஈழத்தோழமை நாள்” கடைப்பிடிக்கப்பட்டது. தாய்த் தமிழகத்து மக்கள் திரண்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்தும், ஈழத் தமிழ் இனப் படுகொலை செய்த சிங்களக் கொலைகார ராஜபக்சே அரசின் மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரியும்,சிங்களருக்கு ஆதர வாக இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும் ஆர்த்தெழுந்து உரிமை முழக்கம் செய்ய மக்கள் நல்வாழ்வு இயக்கம் வேண்டுகோள் விடுத்தது.

Saturday, February 16, 2013

பெட்ரோல், டீசல் விலை உயர்வு-வைகோ கண்டனம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்!

வைகோ அறிக்கை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகக் காரணம் காட்டி, பெட்ரோல் விலை ரூ 1.90, டீசல் விலை 56 காசு என மத்திய அரசு விலை உயர்த்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 இல் பதவி ஏற்றபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 37.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 26.28 ஆகவும் இருந்தது.

கடந்த எட்டு ஆண்டுகளில் இவை 120 சதவிகிதம் அதிகரித்து இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் டீசல் விலைஉயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்தியாவைவிட மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. பெட்ரோல் விலையை பொருத்தமட்டில் இந்தியாவை விட சீனாவில் 50 சதவிகிதமும், பாகிஸ்தானில் 48 சதவிகிதமும், வங்கதேசத்தில் 58 சதவிகிதமும், மலேசியாவில் 68 சதவிகிதமும், அமெரிக்காவில் 47 சதவிகிதமும், வியட்நாமில் 49 சதவிகிதமும், நியூசிலாந்தில் 29 சதவிகிதமும் இந்திய விலையைக் காட்டிலும் குறைவாக உள்ளது.

Saturday, March 24, 2012

வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்


வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அறவழியில், காந்திய வழியில் தொடர்ந்து கடற்கரையோர மக்கள், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். இடிந்தகரையில், உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர். பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் தொடர்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அணுஉலைக்கு எதிராக நேற்று (23.3.2012) பாளையங்கோட்டையில், மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏராளமானவர்கள் பங்கேற்ற போராட்டம், வன்முறைக்குத் துளியும் இடமின்றி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டபின், போராட்டத்தில் கலந்துகொண்ட சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரை, காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு அவர்களை, நேற்று நள்ளிரவுக்கு மேல் இராசபாளையத்திற்கு அருகே கைது செய்துள்ளனர். அவர் மீதும் பொய்யான வழக்குப் போடப்பட்டுள்ளது.