Showing posts with label கூடங்குளம். Show all posts
Showing posts with label கூடங்குளம். Show all posts

Wednesday, December 4, 2013

டிச 21 யில் அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், அணுசக்திக்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இடிந்தகரையில் நடைபெற்றது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மை.பா.சேசுராஜ், தமிழர் தேசிய இயக்க பொதுச்செயலர் பரந்தாமன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர் தியாகு, ம.தி.மு.க. இளைஞரணி செயலர் ஈஸ்வரன், மதிமுக நெல்லை மாவட்ட செயலர் சரவணன், மார்க்சிஸ்ட் கட்சி சங்கரன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தை சேர்ந்த அரங்ககுணசேகரன், தமிழ் தேசப்பொதுவுடமை கட்சி ராசு, மனிதநேய மக்கள் கட்சி அப்துல் ஜாபர், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா கட்சி அகம்மது நவாபி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி (விடுதலை) ரமேஷ், தமிழ்நாடு மக்கள் கட்சி அருண்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, October 3, 2013

அணு உலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும், அணு உலைக்கு எதிரா கப் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ( 02.10.13)புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

பல கட்சிகள் ஒருகிணைந்து பங்கேற்ற போராட்டத்தில் #மதிமுக சார்பாக பங் கேற்ற நிர்வாகிகள் விவரம் ..

சேலத்தில்

சேலம் மதிமுக மாவட்டச் செயலர் தாமரைக் கண்ணன் உடன் பல நிர்வாகிகள் பங்கேற்றார்கள்

Sunday, September 22, 2013

அணுமின் உலைகள் எதற்கு?

அணுமின் உலைகள் எதற்கு?


அலைகடலும் காற்றும் கதிரொளியும் இருக்கையிலே...


“மின்சாரமும் சோஷலிச சிந்தனையைக் கொண்ட அரசும் மனித இனத்தின்
வளர்ச்சிக்கு அவசியம்” என்று சோவியத் விடுதலையின்போது லெனின் குறிப் பிட்டார்.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப்பயன்பாட்டிற்கும் தொழிற்சாலைகள்இயங் கவும், மின்சக்தி இன்றியமையாதது. வாழ்க்கைத் தரமும் தொழில்வளமும் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், அதிகரிக்கும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய பல வழிகளில் மின் உற்பத்தியை அதிகமாக்க முயற்சிகள் மேற் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. வாகனங்களைக் கூடமின்சக்தியால் இயக்குவதற்கு ஆராய்ச்சிகள் முழுமையாகி, சோதனை ஓட்டங்களும் வெற்றி பெற்று, சில நிறுவனங்கள் உற்பத்தியிலும்கூட இறங்கிவிட்டன.

Tuesday, September 3, 2013

அணுஉலையை எதிர்ப்பது

மக்கள் தலைவர் #வைகோ அணுஉலையை எதிர்ப்பது நியாயமானதே!

கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ தொலைநோக்குப் பார்வையோடு குரல் கொடுப்பது முற்றிலும் நியாய மான தே!

கூடங்குளம் பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள், அணுஉலைக்கு எதிராக, 700 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து அறவழியிலும், அமைதி வழியிலும்
போராடி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

Tuesday, August 27, 2013

போராட்டம் நிச்சயம் வெல்லும்!

அணுமின் உலைக்கு எதிரான #வைகோ வின் போராட்டம் நிச்சயம் வெல்லும்!

கூடங்குளத்தில் தமிழக அரசின் இசைவுடன் மத்திய அரசு ரஷ்ய நாட்டு உதவி யுடன் நிறுவியுள்ள அணு உலையை அகற்றக்கோரி அணு உலைக் கெதிரான மக்கள் போராட்டம் 700 நாட்களையும் தாண்டி தொடர் போராட்டமாக தமிழகத் தில் நடைபெற்று வருவது சரித்திரத்தில் இடம்பெற விருக்கும் நிகழ்வாகும். அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கதினரும், பொதுமக்களும், மீனவ சமுதாயத் தினரும்,விவசாயப் பெருங்குடி மக்களும் ஒன்றிணைந்து இடிந்தகரையில் இந்த அறப்போராட்டத்தினை இடைவிடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டு
உள்ளார்கள்.

Tuesday, August 20, 2013

அஞ்சலட்டை அனுப்புவோம்..

கூடங்குளம் அணு உலை குறித்த விவரங்களை கூடங்குளம் அணுமின்
 நிலையம் இயக்குனரிடம் தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி , இடந்தகரையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போரட்டத்தை முன் எடுக்கும் திரு.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார் அவர் வைத்த கோரிக்கை விவரம் ...


தமிழ்ச் சொந்தங்களே! அஞ்சலட்டை ஒன்றை  கீழ்க்காணுமாறு எழுதி அனுப்புவீர்களா, தயவு செய்து!?

Tuesday, August 13, 2013

அணு உலையில் உற்பத்தியை தொடங்க கூடாது

#மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அணுக்கதிர் வீச்சு என்ற அபாய வளையத்திற்குள் உலகமே சிக்கி இருக்கிறது. உலகில் பல நாடுகள் அணு உலைகளை மூட முடியாமல் அதன் ஆயுள் காலம் 40 ஆண்டுகள் தான் என நிர்ணயித்து இருந்தாலும் பத்து, பத்து ஆண்டுகளாக நீட்டித்துக்கொண்டே செல்கின்றன. தற்போது உலகம் முழுவதும் 440 அணு உலைகள் உள்ளன.

Thursday, August 8, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 3

கூடங்குளம் அணுஉலை இயங்கவிடாமல் தடுத்தால் மட்டுமே

தமிழ் இனம் தப்பிக்க முடியும்!
வைகோவின் போர் முழக்கம்

ஓர் அணுஉலை அது இயங்கும் காலத்திலேயே அணுசக்தித் துறை, அதில் இருந்து ட்ரீட்டியம், அர்கான் 41,அயோடின் 131, சீசியம் 137,ஸ்ட்ரோண்டியம் 90 என 200க்கு மேற்பட்ட கதிர் இயக்கத் துகள்கள் மற்றும் வாயுக்களை ஒரு புகை போக்கி வழியாக வெளியேற்றுகிறது.

இதுதவிர, சில மிதமான கதிர் இயக்கக் கழிவுகள் கடலில் கலக்கப்படுகின்றன.
இதன் மூலம் ஓர் அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு
ஏராளமான பாதிப்புகள் உண்டாகிறது என்பதனை உலக அளவில் உடல் நல
ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

Wednesday, August 7, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 2

கூடங்குளம் அணுமின் நிலையம்  முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வில்லை!

நிலஇயல் நீரியல் விஞ்ஞானிகளின் அறிக்கைகள் புறந்தள்ளப்பட்டன!


அணு ஆய்வுத் திட்டங்களில் இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று இந்திராகாந்தி அவர்களுக்கு உள்ளூர ஒரு ஆசை இருந்தது. 1980 ஆம் ஆண்டு அணு ஆய்வு விஞ்ஞானிகளை அழைத்து, ஓர் அணு நீர்மூழ்கியை உரு வாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.ஐந்து ஆண்டுகளாகியும் அவரது திட்டம் நிறைவேறவில்லை.

உடனே இந்திராகாந்தி ருசியாவின் உதவியை நாடினார். ருசிய அரசு அணு நீர் மூழ்கிக்கான தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கிடச் சம்மதித்தது.
அதே நேரத்தில் ஒரு நிபந்தனையும் முன் வைத்தது.

Tuesday, August 6, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 1

கூடங்குளம் அணுமின் உலையால் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்திட இந்திய அரசு துணிந்துவிட்டது!

கூடங்குளம் அணுமின் உற்பத்தி தொடங்கிவிட்டது. எந்த விதத்திலும் அடக்க முடியாத பேராபத்து மக்களின்உயிரைக் குடித்திடத் தயாராகிவிட்டது.உலகமே கண்டு அஞ்சிடும் அணுக்கதிர் வீச்சுக்கு அப்பாவித் தமிழர்களை அழித்து நாச மாக்கிடும் அநீதியை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.

தென்தமிழக மக்கள் இந்தப் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியாது. மக்களைக்
காத்தருள வேண்டிய தமிழக அரசு பயங்கர மரணத்திற்குப் பச்சைக் கொடி
காட்டிவிட்டது. ஆலகால விசத்தை அள்ளிப்பருகி, மக்களைக் காப்பாற்றினான் சிவபெருமான் என்பது புராணக் கதை. அந்த சிவனே இப்போது வந்தாலும்கூட இந்த அணுக்கதிர் இயக்கத்தை-அதன் பேரழிவைத் தடுத்து நிறுத்தவே முடி யாது. இந்த நிலையில் தான் மக்களைக் காத்திடப் பொங்கி எழுந்து போர்ப் பிரகடனம் செய்து களத்தில் இறங்கியுள்ளார் இரண்டாம் அண்ணா வைகோ.

Tuesday, July 16, 2013

பேரழிவு அபாயமான கூடங்குளம்

தென்தமிழ் நாட்டுக்கு பேரழிவு அபாயமான கூடங்குளம் அணுஉலை
மத்திய அரசின் வஞ்சக ஏமாற்று வேலை!

#வைகோ அறிக்கை

கூடங்குளம் அணுஉலையை அகற்றக்கோரி, சுதந்திர இந்தியாவில் இதுவரை எங்கும் நடைபெற்றிடாத வீரம் செறிந்த அறவழிப்போராட்டத்தை, 700 நாட்க ளாகத் தொடர்ந்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், பொதுமக்க ளும், குறிப்பாக மீனவப் பெருமக்களும், இடிந்தகரையை அறப்போர்க்கள மாக் கி நடத்தி வருகின்றனர்.

Tuesday, May 28, 2013

அணு உலை அறிவோம் -நூலில் இருந்து..

செய்திகளில் இருந்து கருத்து பிறக்கிறது. செய்திகளுக்கு எப்போது பண மதிப்பு கிடைத்ததோ, அப்போ திருந்தே செய்திகளில் உயிராக இருந்து வந்த உண்மை செத்துப்போய்விட்டது.செய்திகளில் உள்ள உண்மையைக் கூட்டியோ, குறைத் தோ, மறைத்தோ கொடுப்பதன் மூலம் செய்தியைக் கொடுப்பவர் செய்தியைப் பெறுபவரை தன் விருப்பப்படி சிந்திக்க வைக்க முடியும். அணு உலை விசயத் தில் இது நடந்து வருகிறது.

அணு உலையை ஆதரித்து நீண்ட நேரம் பேசிய இளைஞனிடம், செர்னோபில்
பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, செர்னோபில் என்று எதைச்
சொல்கிறீர்கள் எனத் திருப்பிக் கேட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ கத்தில் கோடி மக்களில் ஒரு இலட்சம் பேருக்குக் கூட செர்னோபில் என்றால் என்னவென்றே தெரியாது.

Sunday, May 19, 2013

அணு உலையை ஆதரிப்பவர்களே, படித்துப் பாருங்கள்!

“அணு உலை அறிவோம்” நூல் வழங்கும் ஆணித்தரமான சாட்சியங்கள்;
அணு உலையை ஆதரிப்பவர்களே, படித்துப் பாருங்கள்!

ஜெ.பிரபாகரன் எழுதிய “அணு உலை அறிவோம்” நூல் வெளியீட்டு விழா 9.5. 2013 அன்று மதுரையில் எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் தலைமையில் நடை பெற்றது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நூலை வெளி யிட, கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு சிறப்பு உரையாற்றினார். அவரது உரையில் இருந்து.....

அணு உலை மனிதகுலத்தின் உயிருக்கு உலை என்று அணு உலை விபத்துகள் வழங்கிய எச்சரிக்கையை, ஒரு ஆவணமாக, நிழற்படங்களின் தொகுப்பு ஆவ ணமாக, அணு உலை அறிவோம் என்கின்ற, தமிழ்  இனத்தைக்காக்கின்ற ஆயு தமாக நூல் ஆசிரியர் ஆருயிர்த்தம்பி பிரபாகரன் அவர்கள் உருவாக்கித் தந்து இருக்கின்றார்கள். 

Tuesday, May 7, 2013

அணுஉலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும்

புதுக்கோட்டையில் ம.தி. மு.க. 20-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கூடங்குளம் அணுஉலையை அகற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் எந்த பகுதியிலும் இந்த அளவிற்கு தொடர் போராட்டங்கள் நடந்தது கிடையாது. ரஷ்ய நாட்டுடன் அணு உலை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே அணுஉலை அமைக்ககூடாது என்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் கொடுத்தவன் நான் தான்.

Sunday, April 21, 2013

கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும் - வைகோ

வைகோ அறிக்கை

தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக வீரியத்தோடு போராடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல் நடந்திருக்க கூடும் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கூடங்குளம் அணு உலைக்காக பொருட்கள் வாங்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜியோ-போல்டோஸ்க் என்கிற நிறுவனத்தின் அதிகாரி செர்ஜி ஷுடோவ் பல நாடுகளிலுள்ள அணு உலைகளுக்கு தரக்குறைவான பொருட்களை வழங்கியதில் ஊழல் என்கிற குற்றசாட்டுகளின் அடிப்படையில் பிப்ரவரி 2012ல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Thursday, April 18, 2013

கூடங்குளம் நோக்கி ஒரு பயணம்

நண்பர்களே, நாங்கள் வரும் மே மாதம் 5ஆம் தேதி இருசக்கர வாகனங்களில் இடிந்தகரை செல்ல திட்டமிட்டு உள்ளோம்.

பயணத் திட்டம்

1)காலை ஆறு மணி அளவில் முதல் அணி துறையூரில் (காமநாயக்கன்பட்டி) இருந்து கிளம்பி 6:30 மணிக்கு சொக்க லிங்க புரம்(கடம்பூர்) வந்தடைந்து , அங்குள்ள குழுவினரோடு சேர்ந்து கயத்தார் நோக்கி புறப்படும்.

2) எழு மணிக்கு கயத்தாறில் இருந்து கிளம்பி திருநெல்வேலி சென்றடையும்.
3) எட்டு மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி சரியாக 10மணிக்கு இடிந்தகரை சென்றடையும்

4) திரும்புவது பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் அல்லது அவரவர் விருப்பதிற்கே விட்டுவிடுகிறோம் 

5)இடைப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் அவரவர் பகுதியில் இருந்து இணைந்து கொள்ளலாம். 

6) நண்பர்கள் இச்செய்தியை மற்ற தோழர்களிடம் பரப்பவும்.

Wednesday, April 17, 2013

தமிழக மக்கள் ,என்ன ,பரிசோதனைப் பொருட்களா ? - வைகோ

கல்பாக்கம் அணுஉலை விபத்து ஒரு அபாய அறிவிப்பு

தமிழக அரசு நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் அப்பகுதிவாழ் மக்களைக் காக்க வேண்டும்

வைகோ அறிக்கை

கல்பாக்கம் அணுமின் நிலையம் 35 ஆண்டுகள் பழமையானது. இந்த அணு உலையில் இருந்து குறைந்த அளவே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் (15.04.2013) காலை ஏழு மணி அளவில் மின் உற்பத்தி தொடங்குவதற்காக, அணு உலையை இயக்கிய சற்று நேரத்தில் மின்மாற்றி பயங்கர சத்தத்துடன் வெடித் துச் சிதறியது. உடனடியாக அணுஉலையின் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டு, தீ அணைப்பு வீரர்களும் விஞ்ஞானிகளும் விரைந்து சென்று, இரண்டு மணி நேரத் துக்கும் மேலாகப் போராடி, தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றனர்.

Saturday, March 24, 2012

வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்


வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அறவழியில், காந்திய வழியில் தொடர்ந்து கடற்கரையோர மக்கள், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். இடிந்தகரையில், உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர். பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் தொடர்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அணுஉலைக்கு எதிராக நேற்று (23.3.2012) பாளையங்கோட்டையில், மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏராளமானவர்கள் பங்கேற்ற போராட்டம், வன்முறைக்குத் துளியும் இடமின்றி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டபின், போராட்டத்தில் கலந்துகொண்ட சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரை, காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு அவர்களை, நேற்று நள்ளிரவுக்கு மேல் இராசபாளையத்திற்கு அருகே கைது செய்துள்ளனர். அவர் மீதும் பொய்யான வழக்குப் போடப்பட்டுள்ளது.

Tuesday, March 20, 2012

கூடங்குளம் -தமிழக அரசின் அராஜகம் - வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரை, அடக்குமுறையின் மூலம் ஒடுக்க முயலும் தமிழக அரசின் அராஜகம்! - வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பேரழிவு ஏற்படும் என்ற நியாயமான அச்சத்தாலும், கவலையாலும், கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும், கடற்கரை யோரங்களிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள், அறவழியில், காந்திய வழியில், அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டெம்பர் 11 இல் தொடங்கி, ஆறு மாத காலமாக, எந்த வன்முறைக்கும் இடம் அளிக்காமல், அமைதி வழியில், தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். 155 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்தி உள்ளனர்.
செப்டெம்பர் மாதம் 12 நாள்கள் இடைவிடாமல் உண்ணாவிரதம் இருந்த போது, தாய்மார்கள் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டனர்.