தூத்துக்குடி மாவட்டத்தில் 2–வது கட்டமாக #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ மறுமலர்ச்சி பயணத்தை நாளை (07.10.13) தொடங்குகிறார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் விவ சாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அண்ணாவின் கனவை நன வாக்குவதற்காகவும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும், கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடவும், தமிழக மீனவர்களின் நலனுக்காகவும், மதுவை அடியோடு ஒழிப்பதற்காகவும் மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு உள்ளார்.