வைக்கம் வீரரின் படத் திறப்பு. தந்தை பெரியார் படம் திறப்பு. திறந்து வைத்தது யார்? வ.உ.சிதம்பரம் பிள்ளை.பெரியாரும் காங்கிரசை வளர்த்தவர்தானே, காங் கிரசில் இருக்கும் வர்ணாசிரமக் கொடுமையை எதிர்த்து வெளியேறியவர் தானே?
1928 ஆம் ஆண்டு பெரியார் படத்தை வ.உ.சிதம்பரம் திறந்து வைத்ததை குடிய ரசுப் பத்திரிகை வெளியிடுகிறது. 20 ஆண்டுகள் கழித்து வ.உ.சி. மறைந்த பிறகு, 1948 இல் மே மாதம் 9 ஆம் தேதி தூத்துக்குடியில் திராவிடர் கழகத்தின் 18 ஆம் மாகாண மாநாடு. அந்த மாநாட்டில் வ.உ.சி. படம் திறந்து வைக்கப்பட்டது.அந்த மாநாட்டில் படத்தைத் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தவர் தமிழ்த் தென் றல் திரு வி.க. ஆனால், அவர் வரவில்லை. அவர் வரவில்லை என்பதால் குத் தூசி குருசாமி அந்தப் படத்தைத் திறந்து வைத்தார். அந்த உணர்வோடுதான் நான் இங்கே பேசுகிறேன்.