Tuesday, April 30, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 20

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு அரண் விடுதலைப்புலிகள்...

தலைவர் வைகோ தமிழீழம் சென்று வந்த தகவல்கள் குறித்து பின்னாளில்,
விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் ‘ஈழமுரசு’ இதழில்
எழுதிய கட்டுரை ஒன்றில், வைகோவின் உயிருக்கு எவ்வாறு அச்சுறுத்தல்
இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

“வை.கோபால்சாமி அவர்களைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக் கும் படி தலைவர் என்னிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு இடமாகத் தப்பி வந் தோம். மணலாற்றில் வை.கோபால்சாமி இருப்பதாக அறிந்த அமைதிப்படை அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் பெரும் முயற்சிகளை மேற் கொண்டது. அலம்பில் பகுதியில் அவரைப் படகேற்றும் வரை அவரது பயணம் பாதுகாப்பாகவே இருந்தது. ஆனாலும், அங்கிருந்து படகில் அவர் நல்ல தண் ணி தொடுவாயைச் சென்றடைந்திருந்த போது, அங்கு இராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வை.கோபால்சாமி காப்பாற்றப் பட்டார். அப்போது நடந்த மோதலில் லப்டினன்ட் சரத் என்ற போராளி உயிரி ழந்தார்.”

தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் -மதிமுக வழக்கு

இந்தி பேசாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதால், ஜம்மு காஷ்மீர் போல, தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, ம.தி.மு.க., தாக்கல் செய்த மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது.

மதுரை ம.தி.மு.க.,தொண்டரணி செயலாளர் பாஸ்கரசேதுபதி தாக்கல் செய்த
பொது நல மனு: இந்தியாவில், இந்தி பேசாத மாநில மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். வடமாநில மீனவர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கியபோது, சர்வதேச கோர்ட் மூலம் 450 வழக்கு களை மத்திய அரசு தாக்கல் செய்து, நியாயம் கோரியது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. இப்பிரச்னைக்கு சர்வதேச கோர்ட்டை, மத்திய அரசு நாடவில்லை.

புரட்சி தொடங்கிவிட்டது; மறுமலர்ச்சி நிகழ்ந்தே தீரும்!

தமிழ்நாட்டுத் தாய்மார்கள் போர்க்கோலம் பூண்டுவிட்டார்கள்;
டாஸ்மாக் கடைகளை எதிர்த்து வீதிக்கு வருகின்றார்கள்!
பொள்ளாச்சியில் வைகோ முழக்கம்

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி -இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், 16.04.2013 அன்று பொள்ளாச்சியில் பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்த்து
முழக்கங்களுடன் தொடங்கியது.நடைப்பயணத் தொடக்க விழாப் பொதுக் கூட்டத் தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

வீரத்தாலும், விவேகத்தாலும்,விருந்தோம்பும் பண்பாலும், கொடை உள்ளத் தாலும், வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்று இருக்கின்ற கொங்கு மண்டலத்தில், பொள்ளாச்சித் திருநகரில், பயணம் வெல்க; தமிழகத்தின் எதிர் காலத்தில் நலம் விழைக என உயர்ந்த உள்ளத்தோடு வாழ்த்தி இருக்கின்ற
பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித் துக் கொள்கின்றேன்.

சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காக்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன் வைகோ அறிக்கை

வெறுப்பையும், வேற்றுமையையும் மனதில் அகற்றி,
சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காக்க
இருகரம் கூப்பி வேண்டுகிறேன்

வைகோ அறிக்கை

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கும் சமூக நீதி மலரவும், அவர்கள் வாழ்வில் உயரவும், தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் கால மெல்லாம் அறவழியில் போராடி, மகத்தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய தில் வட தமிழ்நாடு பெரும் பங்கு வகித்து வந்துள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தைத் தந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் காட்டிய சமூக நீதிப் பாதையைத் தமிழகம் ஏற்றுக்கொண்டதனால், தியாகச் சுடர் காம ராஜர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்த முயற்சிகளால், சமூக நீதிக்காக இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தத்தைக் கண்டது. அத்தகைய பெருமைக் குரிய தமிழகத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும், வர்ணாசிரமத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த தலித் சமூக மக்களும் நேசமும் நட்பும் கொண்டு கரம் கோர்த்து வாழும் நிலை மேலும் மேலும் வளர வேண்டும் என்று ஏங்கி இருந்தேன்.

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -37