அறிவிப்பு நிலையிலேயே உள்ள ஈரோடு - செங்கோட்டை புதிய இரயிலை இயக்கிடுக!
இரயில்வே கூடுதல் நிதிநிலை அறிக்கையின்போது நாடாளுமன்றத்தில் #மதிமுக அ.கணேசமூர்த்தி கோரிக்கை
நாடாளுமன்றத்தில் இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கை 10.12.2009 அன்று
தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த விவாதத்தில் ஈரோடு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:
இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கையில் பேச வாய்ப்பு அளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்ற இரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முந்திய இரயில்வே நிதிநிலை அறிக்கையில், ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை புதிய இரயில் வண்டி இயக்கப் போவதாக அறிவிக்கப் பட்ட அறிவிப்பு இன்னும் நடைமுறைப் படுத் தப்படாமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.பொதுமக்களுக்கு பெரிதும் பயன் படும் இந்த இரயில் வண்டியினை விரைவில் இயக்குவதற்கு ஆவன செய்ய அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.