Saturday, November 9, 2013

எதனாலே இந்த இழிநிலை! கருணாநிதிக்கு ஒரு பகிரங்க மடல்

தி.மு.க. தலைவர் மதிப்புக்குரிய கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.மிகுந்த வருத்தத்துடன் இந்த பகிரங்க மடலை வரைகிறேன்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஐந்துமுறை முதலமைச் சர் பதவியை அலங்கரித்தவர்; திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார் கரம் பற்றி, பேரறிஞர் அண்ணாவின் வழியில் நடைபோட்டு 90 வயதிலும் துடிப்பாக
இயங்குகிற தலைவர் நீங்கள் மட்டுமே.இனமானப் பேராசிரியர் உங்களைவிட
வயதில் மூத்தவர். அவரும் நீங்களும் மட்டுமே பழைய தலைவர்கள் வரிசை யில் பாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் குடியிருக்கும் கோபாலபுரம் இல்லம் உங் கள் வசிப்பிடம் மட்டுமல்ல, இந்திய அரசியலில் டெல்லி அதிகார பீடத்தையும் அசைத்துப் பார்க்கும் வகையில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ செயலகமாகவும் கோ பாலபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.பழம் தின்று கொட்டை போட்ட தலை வரான தங்களின் இல்லம் எத்தனையோ சதி ஆலோசனை சபையான முற்ற மாகவும் திகழ்ந்து இருக்கிறது.

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்ச்சி

தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், #வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர் களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப் பளவில் கட்டப்பட்டு உள்ளது.

அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் நேற்று (08.11.13) மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்யனாபுரம் முருகேசன் வரவேற்றார். விழாவை காசிஆனந்தன் தொடங்கி வைத்தார்.

Friday, November 8, 2013

இலங்கை காமன்வெல்த்திலிருந்து நீக்கப்பட வேண்டும் ,நவம்பர் 12 தமிழகத்தில் முழு அடைப்புக்கும் தமிழக மக்கள் தோள்கொடுக்க வேண்டும்

ஈழத் தமிழர்களை மயான பூமியாக்கிய இலங்கை காமன்வெல்த்திலிருந்து நீக்கப்பட வேண்டும்

நவம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தில் கடை அடைப்புக்கும் முழு அடைப்புக்கும்
தமிழக மக்கள் தோள்கொடுக்க வேண்டும் #வைகோ அறிக்கை

இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று ஒரு கருத்து உண்மையான உணர்வாளர்களாலும், 2008-2009 இல் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அப்போது அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளாலும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

Thursday, November 7, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 4

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

இசையும், கலையும்

இசை வளர்த்த இடம் இந்த தஞ்சை மண்டலம். இங்கேதான், மாரிமுத்தா பிள் ளையும் அருணாசல கவிராயரும் - முத்துத் தாண்டவரும் வாழ்ந்தார்கள். இந் தத் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள்தான். இங்கே வாழ்ந்த ஆபிரகாம் பண் டி தர், ‘கருணாமிர்த சாகரம்’ என்கிற அற்புதமான ஒரு இசைக்காவியத்தைத் தந்து இருக்கிறார். இந்த நூலிலும் கூட, கல்கி ஆசிரியர் பழைய செய்திகளை எல்லாம் சொல்கிறார்.

காவிரி வளத்தைச் சொல்கிறார். இசையின் சிறப்பைச் சொல்கிறபோது

‘கொன்றைன் தீங்குழல் கேளாமோ தோழி
ஆம்பலென் தீங்குழல் கேளாமோ தோழி’

என்கின்ற சிலப்பதிகாரப் பாடல் வரிகளைப் பாட வைக்கிறார்.

கட்டபொம்மனின் 214 வது நினைவேந்தல்-வைகோ உரை-பாகம் 2

அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்!

பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 ஆவது நினை வேந்தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடை பெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ ஆற்றிய வீர உரையின் சென்ற பாகத்தின் தொடர்ச்சி வருமாறு:

அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணை என்ற பெயரில், ஒரு போலி நாடகம்
தொடங்கியது. வீரபாண்டிய கட்ட பொம்மன் மீது ஐந்து குற்றச்சாட்டு களைச் சுமத்துகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதைத் தமிழில் மொழி பெயர்த் துச் சொன்னார் துபாஷி இராமலிங்க முதலியார். அதற்குக் கட்டபொம்மன் சொன்ன பதில்களை,ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப்பானர்மேனுக்குச் சொல் லுகிறார்.சுற்றிலும் வெள்ளையருக்கு ஆதரவான பாளையக்காரர்கள் உட்கார்ந் து இருக் கிறார்கள். மக்கள் கூடியிருக்கிறார்கள்.
முதல் குற்றச்சாட்டு: கிஸ்தி கொடுக்க வில்லை.

அதற்குக் கட்டபொம்மன் பதில்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.

இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்க வில்லை.