Wednesday, November 6, 2013

தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-மதிமுக ஆதரவு

தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-#மதிமுக ஆதரவு 

தென்காசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 27 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவ திப்பட்டனர்.

சுமார் 2 ஆண்டுகள் கழித்து சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. கனரக வாக னங் கள் இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாக மாற்றிவிடப்பட்டன. இலகுரக வாக னங்கள் சர்வீஸ் ரோட்டில் சென்று வருகின்றன. ஆமை வேகத்தில் நடை பெற் ற மேம்பாலப் பணி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது.மேம்பாலப்பணி நிறைவு பெற்றதால் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத்திறக்கப் படும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

Tuesday, November 5, 2013

கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை

கொளத்தூர் மணி மீது தேச பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறை - #வைகோ  கண்டனம்

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று ஒரு பழமொழி உண்டு. அண்ணா தி.மு.க. அரசின் பாசிச முகத்திரை கிழிந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக, குறிப் பாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக கடந்த காலத்தில் சர்வாதிகார பொடா அடக்குமுறையை ஏவிய முதலமைச்சர் ஜெய லலிதா, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்று ஒரு கபட நாடகத்தை நடத்தினார்.

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 29

நாள்:-11.09.2008

இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் கேடு செய்யும் இந்திய அரசு!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தமிழர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் மேற்கொள்ளும் இலங் கை இராணுவத்தினருக்கு அக்கிரமமாக உதவி புரிந்து வரும் இந்திய இராணுவ அதிகாரிகள், தொழில்நுட்பப் பொறியாளர்கள் ஆகியோரது ஈடுபாட் டை, தாங் கொணாத் துயரத்தோடும், மனவேதனையோடும் நான் கண்டனம் செய்கி றேன். இராஜபக்சேயின் இனவாத அரசு, இலங்கைத் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தொடுத்து தமிடிந இனத்தையே அழித்து ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

திண்ணைப் பேச்சிலிருந்து தெருமுனை வரையிலும்

திண்ணைப் பேச்சிலிருந்து தெருமுனை வரையிலும் #வைகோ - வைகோ - வைகோ 

மாற்றம் என்பது காலத்தின் கட்டாயமாகும். நாம் விரும்பினாலும், விரும்பா
விட்டாலும் காலத்தின் ஒவ்வொரு அசைவிலும் மாற்றத்தையும் மறுமலர்ச்சி யையும் கொண்டு வருகிறது.அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?வாய்ப் பைக் கண்டு கொள்வது - அதைக் கைப்பற்றுவது - சரியாகப் பயன் படுத்துவது

என்கிற இந்த மூன்று நிலைகளையும் மக்களிடமிருந்து கண்டு கொள்வதற்கா கவே வைகோ அவர்களின் மறுமலர்ச்சிப் பயணம் பெரிதும் பயன்பட்டது.

“வாய்ப்பு வரும்போது காலத்தைக் கருத்தில் கொண்டு, நாம் அதை அழுத்தமா கப் பற்றிக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று முன்னாள் பிரத மர் பெஞ்சமின் டிஷ்ரேலி கூறுவார்.

மதுக்கரை- வாளையாறு சாலைப் பணியை நிறைவேற்ற வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

மதுக்கரை-வாளையாறு இடையே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணி யை நிறைவேற்ற மாநில அரசின் ஆதரவு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என #மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் வலியுறுத்தியுள் ளார்.

இது குறித்து ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கப்பள்ளி-வாளை யாறு வரையிலான தேசிய நெடுஞ்சாலை-47-ஐ அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இதில் மதுக்கரை - வாளையாறு வரையிலான 15 கி.மீ. தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள் ளது.