ஆன்றோர் சான்றோர் போற்றும் தலைவர் #வைகோ என்று விருதுநகர் #மதிமுக மாநாட்டில் கவிஞர் தமிழ்வென்றி (எ) ராஜா முகமது புகழாரம் சூட்டி னார். அவரது உரை வருமாறு
எந்த மொழிப்போர் இந்த மண்ணில் என்னை தமிழ் வென்றி யாக ஆக்கியதோ, அரைக்கால் டவுசர் பருவத்தில், எந்த மொழிப் போர் ஏற்றி வைத்த கனல் என்
தலைவன் வைகோவைப் பார்த்து அந்த முதல் நொடியிலேயே காந்தம் இரும் பை ஈர்ப்பதைப்போல, அன்றுதொட்டு இன்று வரை அவரது தம்பி என்கிற தகுதி யோடு நிற்கின்ற அந்த வாழ்க்கையைக் கொண்டிருக்கிற தகுதியைக் கொண்டி ருக்கிற காரணத்தினாலே,மொழிப்போர் தியாகிகளின் படத்தைத் திறந்து வைக் கின்ற ஒப்பற்ற வாய்ப்பை வழங்கியிருக்கிற தலைவருக்கு என்னுடைய நன்றி யைத் தெரிவித்தனாக என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.