Showing posts with label புல்லர். Show all posts
Showing posts with label புல்லர். Show all posts

Wednesday, April 24, 2013

தூக்கு தண்டனைக் கொட்டடியில் இருந்து மூன்று தமிழர் உயிரைக் காப்போம்!

ச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பு ஒன்று மனித உரிமை ஆர்வலர்களையும், குறிப்பாக -தமிழ் சமுதாயத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. 1993 செப்டம்பர் மாதத்தில், டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு குண்டுவெடித்ததில் 9 பேர் பலி ஆனார்கள். இச்சம்பவத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மனீந்தர்சிங் பிட்டா படுகாயத்துடன்
உயிர் தப்பினார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பஞ்சாபில் தனிநாடு கேட் டுப் போராடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்புதான் பின்னணி யில் இருந்தது என்றும், இதில் சம்பந்தப்பட்டவர் தேவிந்தர் பால் சிங் புல்லர் என் றும் காவல்துறை அவரை கைது செய்தது. ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற புல் லர் அந்நாடு அடைக்கலம் தராமல் 1995 இல் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திய போது,புல்லர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் 2001 ஆகஸ்டு மாதம் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது,2002 மார்ச் 26 இல் தள்ளுபடி செய்யப்பட்டு, புல்லரின் மரண தண்டனை உறுதி யானது.  பின்னர் புல்லரின் மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித் தது.