Showing posts with label ராம் ஜெத் மலானி. Show all posts
Showing posts with label ராம் ஜெத் மலானி. Show all posts

Tuesday, August 13, 2013

என் உயிர் உள்ள மட்டும்...!

ஈழத்தமிழர்களுக்காகப் பொங்கிய ராம் ஜெத்மலானி!

ஈழப்பிரச்சனை டெல்லி மற்றும் வடமாநிலங்களிலும் இப்போது எதிரொலிக் கிறது. ஈழப்போரின்போது தமிழர்கள் பட்ட அவலம் மற்றும் சேனல்4 தொலைக் காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தையும் வைத்து #வைகோ தொகுத்த சி.டி.இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளி வந்துள்ளன.

அனைத்து மாநிலத் தலைநகரங் களிலும் இவற்றை வெளியிடும் காரியத்தை வைகோ தொடங்கி உள்ளார். இதற்கான விழா கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் நடந்தது.அன்றுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் என்பதால், உணர்ச்சி மயமாக இருந்தது அரங்கம்.

Wednesday, April 24, 2013

தூக்கு தண்டனைக் கொட்டடியில் இருந்து மூன்று தமிழர் உயிரைக் காப்போம்!

ச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பு ஒன்று மனித உரிமை ஆர்வலர்களையும், குறிப்பாக -தமிழ் சமுதாயத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. 1993 செப்டம்பர் மாதத்தில், டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு குண்டுவெடித்ததில் 9 பேர் பலி ஆனார்கள். இச்சம்பவத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மனீந்தர்சிங் பிட்டா படுகாயத்துடன்
உயிர் தப்பினார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பஞ்சாபில் தனிநாடு கேட் டுப் போராடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்புதான் பின்னணி யில் இருந்தது என்றும், இதில் சம்பந்தப்பட்டவர் தேவிந்தர் பால் சிங் புல்லர் என் றும் காவல்துறை அவரை கைது செய்தது. ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற புல் லர் அந்நாடு அடைக்கலம் தராமல் 1995 இல் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திய போது,புல்லர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் 2001 ஆகஸ்டு மாதம் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோது,2002 மார்ச் 26 இல் தள்ளுபடி செய்யப்பட்டு, புல்லரின் மரண தண்டனை உறுதி யானது.  பின்னர் புல்லரின் மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித் தது.

Thursday, March 1, 2012

மூன்று தமிழர்கள் மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதி அன்று தடை விதித்ததற்குப் பின்னர் அந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சிங்வி, நீதிபதி முக்கோ பாத்தியாய அமர்வில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளும் பட்டியலில் இன்று இடம் பெற்றிருந்தது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லர் தூக்குதண்டனை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் உள்துறை செயலாளர்களும் தூக்குத் தண்டனை வழக்குகள், கருணை மனுக்கள் குறித்த அனைத்து விபரங்களையும் மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதியரசர் சிங்வி அறிவித்திருந்தார். ஆனால், ஒருசில மாநிலங்களில் இருந்து மட்டுமே தகவல்கள் தரப்பட்டுள்ளன.

Wednesday, February 22, 2012

மூன்று தமிழர்கள் மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அந்த வழக்கை அங்கிருந்து மாற்றுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பின்னணியில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (22.2.2012) உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் சிங்வி, நீதியரசர் முகோபாத்தியாயா அமர்வில் வந்தது.

மாற்றுதல் செய்யக் கோரிய மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மூன்று பேர் மரண தண்டனை வழக்கையும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லர் வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும், இரண்டு முறை வேறு அமர்வுகளிலே இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இதே நீதிமன்றத்தில் அனுப்பப்பட்டுவிட்டது; அதனால் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.
புல்லர் வழக்கு விசாரணை நடைபெறும். அதன்பிறகு முறையாக மற்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி சிங்வி தெரிவித்தார்.