சங்கொலி தலையங்கம்
உணவுப் பாதுகாப்புச் சட்டம் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்!
உணவுப் பாதுகாப்புச் சட்டம் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்!
காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு மீண்டும் ஒருமுறை தேசி ய உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காங் கிரஸ் தலைவர் திருமதி சோனியா மூளையில் உதித்த திட்டம் என்று வெகு வாகப் புகழப்படும் உணவுப் பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை கேலிக்கூத்தாக்கிவிட்டு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஆகஸ்டு 26 ஆம் தேதி மக்களவையில், உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் உண வுப் பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, கிராமப் புறங்களில் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 50 சதவீத மக் களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மசோதாவை அறி முகம் செய்த அமைச்சர் கே.வி.தாமஸ் குறிப்பிட்டார்.