ஸ்டெர்லைட் வழக்கு:
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்
தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து, ஸ் டெ ர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு சென்னையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசார ணை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வுக்கு மாற்றப்பட்டு, இன்று (08.05.2013) விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறை யீட் டு மனுவை தீர்ப்பாயம் விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில்தான் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் திட்டவட்டமாகக் கூறுவதால், இதை விசா ரிக்கக்கூடாது என்று சென்னை அமர்விலேயே வைகோ ஆட்சேபணை தெரி வித்திருந்தார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தீர்ப்பாயத்துக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.